சிரஞ்சீவியான அன்னே!- எழுபத்திமூன்று வயதைக் கடந்த அன்னை அல்லவா?
அதிகாலையில் நான்குமணி அளவில் படுக்கையை விட்டு எழும் அன்னை, இரவில் நெடுநேரம் கழித்துத்தான் படுக்கையில் படுப்பது வழக்கம். அதிகபட்சமாக, மூன்று மணிநேரம்தான் உறங்குவார்!- ஆனல், நோய்நொடி யென்று படுத்தது கிடையாது. எப்போதாவது முதுகு வலிக்கும்; பல் வலிக்கும்; அவ்வளவுதான்!- அன்ன தமக் கென்று அமைத்துக் கொண்ட சொந்தத் தனி அறை 8 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்டது. ஒரேயொரு சன்னல்தான். அந்த சன்னலைத் திறந்து விட்டால், இந்திய மார்க் nயக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது உடைமைக் கட்டடம் அழகாகக் காட்சி கொடுக்கும் இரவிலே 'அன்பின் துரதர்கள் அமைப்பின் இல்லங்கள் எல்லாமே கண் வளர்ந்து கொண்டிருக்கையில், அன்னை மட்டும் கண் விழித்துத் தம் பெயருக்கு வந்த கடிதங்களுக்கான பதில் களைத் தம் கைப்படவே எழுதுவார். வெறும் தரையிலே தான் அன்னை உறங்குகிருர்! கோப்புக்களும் புத்தகங்களும் இறைந்து கிடக்கும்!- பிரார்த்தனை நூல்களை மட்டுந்தான் படிப்பார் அன்னே!
காலம் பொன்னனது.
காலத்தைப் பொன்னேபோல் காட்டும் கடிகாரத்தின் செயலாண்மைத் தடத்தில் அன்னையின் அன்புப்பணி: அமைப்புக்கள் அனைத்தும் இயங்கி வருகின்றன.
இம்மாபெரும் அன்பின் அமைப்பிற்கு மேதகு அன்ன தெரேசா அவர்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உகந்த புனிதமிகு பெருந்தலைவியாகவும் (Superior General) தேர்ந்து விளங்குகிருர்கள்!
இன்னும் ஆறு ஆண்டுகள் கழித்து, மீண்டும் தேர்தல் நடைபெறும். தேர்ந்தெடுக்கும் உரிமைக்கு உரியவர்கள்
பக்கம்:அன்னை தெரேசா.pdf/177
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது