பக்கம்:அன்னை தெரேசா.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

19 அன்னையுடன் உரையாடுகிருர் மால்கம். பேட்டியாளர்: அன்னையே, ஏழை மக்களிடம் உங்களை அர்ப்பணம் செய்து கொள்ள வேண்டுமென்ற அந்த ஒர் உன்னத உணர்வு உங்கள் மனத்திலே எப்போது தோன்றிற்று? அன்னை: உலகத்திலே, மனிதகுலத்தின் சமுதாய வீதிகளிலே, பொழுது விடிந்து பொழுது கழிந்தால், வாழ் வின் சமதருமமற்ற விதியோடு போர் நடத்தி, போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிற ஏழைகளிலே மிக மிக ஏழைகளாக வெந்தும் நொந்தும் திரிகின்ற ஆண்ட வனின் குழந்தைகளான மக்களுக்கெல்லாம் பணிபுரிய வேண்டுமென்ற மனிதாபிமானத் துடிப்பு எனக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே, அ.தா வ து, நான் பன்னிரண்டு வயதுச் சிறுமியாக எனது பெற்ருேருடன் வாழ்ந்த அந்த 1922 காலக் கட்டத்திலேயே என்னுள்ளே உருவாகி வளரவும் தொடங்கி விட்டது!- மக்களின் கே, மலாபப் பணிக்கு என்னைக் காணிக்கை வைக்கவேண்டு மென்பதாக என் உள்ளத்தின் உள்ளே கிளர்ந்தெழுந்த அந்த அன்பின் துடிப்பையும் ஆர்வத் துண்டுதலையும் என்னே ஆண்டு ஆட்கொண்ட அன்பிற்கு இனிய என் ஏசு தாதர் எனக்கு இட்ட அழைப்பாகவும் ஆணையாகவும் கருதி மதிக்கத் தலைப்பட்டேன். என் இலட்சியக்கனவு பலித்து விட்டதாகவே நான் மதிக்கிறேன்; பலித்து வருவதாகவே நான் அந்தரங்க சுத்தியோடு உணரவும் செய்கிறேன்! . பேட்டியாளர்: உங்களுடைய அன்பான நிழலில் நான் தங்கிய சில நாட்களிலேயே, அருட் தேவனின் அன்புமிக்க புதியதோர் உலகத்தையே கண்டேன்! - வெளியாரோ, அல்லது தனியாரோ யாருமே செய்ய முடியாத, செய்யத் துணியாத பொதுநலச் சேவைகளை உங்களது இயக்கத்தின் புனிதச் சகோதரிகள் ஒப்புத லுடனும் ஒப்புரவுடனும் சமூக அளவிலும் செய்வதென்பது உண்மையிலேயே ஆச்சரியமான காரியம்தான்! அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/18&oldid=1457870" இலிருந்து மீள்விக்கப்பட்டது