பக்கம்:அன்னை தெரேசா.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

 தரையிலே விரிக்கப்பட்டிருக்கும் விரிப்புக்களிலோ, அல்லது, ம ரு த் து வ ம ன க் கட்டில்களிலோதான் சகோதரிகள் உறக்கம் கொள்வார்கள். தலைமைச் சகோதரியின் முன் அனுமதியின்றி, சகோதரிகளில் யாரும்: அன்புப் பணிமனையை விட்டு வெளியே போகமுடியாது; சொந்த முறையில் கடிதம் எதையும் அவர்கள் பெற: இயலாது; தனிப்படச் சொந்தம் பாராட்டிச் செல்லப் பெயரால் அழைத்துக் கொள்ளவும் சகோதரிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். காரணம் இதுதான்! அவர்களுடைய அன்பு முழுவதும் இயேசுவிற்கே சொந்தம்:
இந்திய நாட்டிற்குள் அன்னை எங்கே வேண்டுமானுலும் ரயிலில் போகலாம்; வரலாம்.
தங்களது ஏமன் நாட்டில் அறுநூறு ஆண்டுக் காலமாக செயல்படுத்தப்பட்டு வந்த தடைஉத்தரவை அந்நாட்டின் பிரதமர் அறுபது காலக் கட்டத்தில் விலக்கிய தோடு, அன்னையை வரவழைத்து, அன்பின் கிளையை அங்கேயும் ஆரம்பம் செய்ய வேண்டுதல் விடுத்ததோடு, அன்னேக்குத் தமது நாட்டின் அன்பின் பரிசிலாக வாள் ஒன்றையும் வழங்கினர்!
இன்றும் என்றும் பெற்ற தாயென்று கும்பிடப் படுகின்ற பாரதத் தாய்நாட்டிலே, மதம் இனம் மொழி நாடு மற்றும் கட்சிகளைக் கடந்ததொரு பொதுத் தலைவி யாகவே ஏற்றிப் போற்றப்பட்டு வருகின்ற அன்னையின் வாழும் புகழ், உலகத்தின் மக்களுக்கு மத்தியிலும் சிரஞ்சீவிப் புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கிறதென் பதும் உலகறிந்த உண்மை!
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வெள்ளை மாளிகைத் தலைவர் ரொனல்ட் ரீகன், அன்பான அன்னைக்குப் பேட்டி கொடுத்து விருந்தும் கொடுக்கவில்லையா? பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தியோடு நெருக்கடி நிலைக் காலத்தில், கட்டாயக் கருத்தடைபோன்ற ஓரிரு நடப்புக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/180&oldid=1677878" இலிருந்து மீள்விக்கப்பட்டது