23 சமூக அநீதிகளின் விளைவாக அன்ருடம் சாவுக்கும் வாழ்வுக்கும் இடையிலே செத்துச் செத்துப் பிழைக்கிறபிழைத்துப் பிழைத்து மடிகிற எண்ணிலடங்காத ஏழை களைப்பற்றி-ஆண்டவனின் குழந்தைகளான அந்த ஏழை களைப் பற்றி எண்ணிப் பார்க்கக் கூடிய பொன்மனம் அன்றைக்கு அன்னைக்கு இருந்த காரணத்தினலேதான், இன்று அன்னையின் அன்புப் பணி இயக்கம், வளர்ந்து கொண்டிருக்கும் மூன்ருவது உலகத்திலும் அடி முடி தொட்டுக் கற்பக விருட்சமாக வளர்ந்திருக்கிறதென்றும் சொல்லலாம்! "நம்பிக்கை எனும் மேலான, மேன்மையான சக்தி ஆண்டவனின் அருட்பிரசாதம் நம்பிக்கை இல்லாவிடில், அப்பால், வாழ்க்கையே கிடையாது! மனிதப் பிறவி பயன் பெற்றுப் பயன் தர வேண்டுமெனில், நாம் ஆண்டவனின் மெய்யன்புப் பணியாளர்களாக ஆக வேண்டும்; அப்போதுதான், நம்பிக்கையின் பலம் பெற்ற மனித வாழ்க்கையில், மற்றவர்களேயும் நேசிக்கக் கூடிய மனப்பக்குவம் பலன் பெற இயலும் உணர்ந்ததைக் கண்டு, கண்டதை உணர்த்துகின்ற அன்னையின் மூதுரைக்கு அன்னையே சாட்சி ஆகிரு.ர். . அன்று, நம்பிக்கை இழந்து, ஆதரவு இற்றுப் போன ஏழை எளிய மக்களின் இருண்ட வாழ்க்கையில் அன்னை கருணையுடன் ஏற்றி வைத்த அன்பு விளக்கு இன்று மேலும் மேலும் பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கிறது!-அது என்றென்றும் அமர ஒளியாகவே விளங்கும்! 1971 = பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்ததொரு மாநிலமாக அப்போது விளங்கிய கிழக்கு வங்காளம் சார்ந்த மக்கள், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். வங்கப் போர் மூண்டது.
பக்கம்:அன்னை தெரேசா.pdf/23
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை