1982, ஆகஸ்ட், 18 : இடம் : பெய்ரூத்: உலகத்தின் அமைதியைச் சோதனை செய்த மற்று ம்ொரு துன்பநாள். f இஸ்ரேலின் பயங்கரக் குண்டு வீச்சுக்கு இலக்கான பெய்குத் நகரில் அல்லற்பட்டு அவதிப்பட்ட மக்களுக்கு. அவசியும்ான உதவிகளை அவசரமாகச் செய்திட, அன்ன பெய்ரூத் நக்ருக்கு வந்து சேர்ந்தார்; முற்றுகை இடப் பட்டுக் குண்டு வீச்சுக்கு ஆட்படுத்தப்பட்ட மேற்கு பெய்ரூத் நகரிலிருந்த ஒரு மனநோய் மருத்துவ மனையினின்றும் ஆதரவற்றுத் தவித்த முஸ்லிம் குழந்தை களைக் காப்பாற்றி, லெபனன் தலைநகரில், பெய்ரூத்தில் இயங்கில்ரும் அன்புப் பணி. அமைப்புப் பள்ளியில் அக்குழந்தைகளுக்குச் சிகிச்சை அளித்தார்!- மேற்கண்ட பயங்கரப் போரில் பலியாகவிருந்த பச்சிளங்: குழந்தைகளைப் புனிதமான மனிதாபிமானத்தோடும், அன்பான தொண்டுள்ளத்தோடும் காப்பாற்றியதற்கு அரசியல், பின்னணி எதுவும் இல்லையெனவும் அப்போது அன்ன தெரேசா அறிவித்தார்!- இஸ்ரேல் துப்பாக்கிகள் கொடுமை சூழத் தீ நர்க்குகளைப் பயங்கரமாக நீட்டிப் பயமுறுத்திக் கொண்டிருந்த அச்சோதனைப் பொழுதிலே, மேற்குப் பெய்ரூத் நகரின் வீதிகளிலிருந்து அன்னை தம் உயிரை ஒரு பொருட்டென மதிக்காமல், குழந்தைகளின் உயிர்களைப் பெரிதென மதித்து அவர்களைக் காப்பாற்றிய அந்த அருமை பெருமையை உலக வரலாறு என்றென்றும் நன்றியுடன் சொல்லிக்கொண்டிருக்கும். ، ، روسي: "" தெரேசாவை-அதாவது, அம்மா தெரேசாவை அரபு மொழி மறவாது! - - பின்னர், இஸ்ரேல் மற்றும் அரபுத் தலைநகர்கட்கு. விஜயம்t செய்தபோது, போர் மேகங்கள். சூழ்ந்த காலர் வகுதியின் கேந்திரத்திலும் கூட, அன்புப் பணிக்கு அடிகோலினர் அன்ன்ை!.
பக்கம்:அன்னை தெரேசா.pdf/26
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை