27 கத்தியின்றி, ரத்தமின்றி அடிம்ை விலங்குகளை அறுத்தெறிந்து சுதந்தரம் பெற்ற பாரதத் தாய்நாட்டின் புனிதமயமான வரலாற்றில், 1983 பிப்ரவரி ரத்தக்கறை படிந்த ஏடுகளின் காலக்கட்டமாக அமைந்தது. அக்காலக் கட்டத்திலே தான், அஸ்ஸாம் மாநிலத்தில் பயங்கரமாண் படுகொலைகள் நடந்தன! - அஸ்ஸாம் படுகொலைகளில் முக்கியம் பெற்ற நெட்லே, வில்லாங் போன்ற இடங்களுக்கு அன்னையுடன் பின் தொடர்ந்த இந்தியா டுடே’ (India Today), už $ffisws பின் படப்பிரிவு மற்றும் செய்தித்துறை சார்ந்த ரகுராய், சுமிட் மித்ரா ஆகியோர், அன்னையோடு தொடர்ந்து கலந்துரையாடிய சமயங்கள் முக்கியம் பெற்றன. * அன்னை பேசுகிருர்கள் : "...அஸ்ஸாம் படுகொலைகளைப் பற்றி நான் அறிந்ததும், என்னுடைய முதல் எண்ணம் அந்தப் பகுதிகளின் அைைதகளைப் பற்றித்தான் எழுந்தது. பாவம், அவர்களுக்கெல்லாம் இப்படிப்பட்ட கலவரங்கள் மற்றும் கலகங்கள் பற்றின காரண காரியங்கள் கூட சரிவரத் தெரியாதே? தங்களைப் பற்றி கவலேயும் அக் கறையும் கொள்ள உலகத்திலே இன்னமும் மனிதர்கள் இருக்கிருர்கள் என்னும் நம்பிக்கையை அவர்களது உள்ளங் களில் ஏற்படுத்தவேண்டுமென்பதுதான் அவசியமானதும் அவசரமானதுமான முதற் பணியென்றும் நான் எண்ணினேன்! பிறகு, அஸ்ஸாம் முகமதியர் சங்கத் திலிருந்தும் எனக்குக் கடிதம் வந்தது!’ . . . . . . . . . . . . . . . . . ." பிரச்சனக்குரிய வின எழும்புகிறது. "ஊஹாம்; அஸ்ஸாம் படுகொலையில், பாதிக்கப் பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காக மட்டும் எங்களது அன்புப் பணி தொடரவில்லை. பெய்ரூத் ஆகட்டும், அஸ்ஸாம் ஆகட்டும்! அங்கங்கே வாழ்கின்ற மக்கள் அனைவருமே ஆண்டவனின் குழந்தைகள் அல்லவா? தேசம், இனம், மதம், மொழி போன்ற கட்டுப்பாடுகள் அல்லது
பக்கம்:அன்னை தெரேசா.pdf/27
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை