28 தடைகளைக் கடந்த அளவிலும் பொது அன்பின் பேரிலுமே எங்களது அன்புப் பணி இயக்கம் அன்றிலிருந்து இன்று. வரையிலும் செ ய லா ற் றி வருகிறது! அஸ்ஸாம் மாநிலத்தில் அமைதி நிலவுமென்றும் இப்போது நான் நம்புகிறேன். மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் அருமை யானதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்வுண்மை நிலையை அஸ்ஸாமியர்கள் உண்ரவேண்டும். மன்னிக்கக் கூடிய மனநிலை சித் திக்கப் பெருமல் போனல், பிறகு, நாம் ஒருவரையொருவர் எங்ங்ணம் நேசிக்கக் கூடும்?” என்ருர் அன்ன. ஆமாம்; நேசிப்பதற்கும். நேசிக்கப்படுவதற்குமே நாம் ஆண்டவனல் படைக்கப்பட்டிருக்கிருேம். பிரார்த் தனையின் பலன்தான் அன்பு-நேசம்; நேசத்தின் விளைவாகவே, தொண்டு சிறக்கும்! அறநெறி தழுவிய எங்களுடைய ஏழை நல அன்புப் பணிமுறையின் பொதுவான விதிமுறையும் இதுவே தானே?’ என்று மேலும் தொடர்ந்தார்கள். 1983: சங்கம் வளர்த்த தேமதுரத் தமிழ் அன்னையின் அன்பு மக்களான தமிழர்கள் சிங்களத் தீவினிலே அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில், அன்னையின் அன்புப் பணிகள் தமிழ் ஈழத்தின் காப்புக்கும் அடிகோல வேண்டுமென்று ஒலித்தது தமிழ்க் குரல்! - கேள்விகள் மறுபடி புறப்படுகின்றன: ஏழைகளிலும் ஏழைகளுக்குப் பணி செய்ய வேண்டுமென்று தாங்கள் உலகிற்கு முன்னேடியாக முன்வந்ததற்குப் பிரத்தியேக மாகக் காரணம் ஏதாவது இருக்கிறதா?’’ 'ஏழைகளால் தங்களுக்காகப் போராட முடியும்; ஆனல், ஏழைகளில் ஏழைகளால் அவ்வாறு போராட முடியாது. இவர்களுக்கென்று உலகத்திலே யாரும் இல்லை; எதுவும் இல்லையே! தவிரவும், இவ்வுலகத்திலே தங்களுக்கென்று யாருமே இல்லாத, எதுவுமே இல்லாத துர்ப்பாக்கியசாலிகள்தாம் கடையரினும் கடையராகக் கருதப்படுகிருர்கள்! அப்படிப்பட்டவர்களுக்குத்தானே
பக்கம்:அன்னை தெரேசா.pdf/28
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை