32 குடிமகள். ஆனலுங்கூட, இங்கே ஒருவரையொருவர் அன்பு பாராட்டுவதோ, அல்லது, ஒருவருக்காக மற்றவர் கவலைப்படுவதோ கிடையாதென்கிற துர்ப்பாக்கிய நிலையை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனல் ஒன்று மனிதாபிமானத்தின் பண்பும் மனிதத்தன்மையின் பண்பாடும் குறைந்த வருந்தத்தக்க இத்தகைய போக்குக்கு. இந்துமதம் ஒருவகையிலும் காரணம் ஆகாது! - மனிதர்களே நேசிக்கக் கூடாதென்று எந்த ஒரு மதமும் சொல்லாது; சொல்லவும் முடியாது: சொல்லவும் கூடாது: வாழ்க்கை நிலையில் கொடுமையையோ, ஏற்றத்தாழ் வையோ, வறுமையையோ, இரக்கமற்ற தன்மையையோ இல்லை, நாத்திகப் போக்கையோ எம்மதமும் அனு மதிப்பது கிடையாது! ஆனால், இந்திய நாட்டில் நிலவி வரும் ஜாதிமுறை காரணமாகவும், நாட்டிலே அன்பு வளரவும் முடியாமல் வாழவும் இயலாமல் தவிக்கிற தென்னும் உண்மையை நாம் எப்படி மறுத்துவிடக் கூடும்?" கேள்வி: இந்தியாவில் மட்டு மல்லாமல், உலகில் வேறெங்குமே காணமுடியாத அளவுக்கு அன்புள்ள தாகவும் ஆன்மபலம் மிக் கதா கவு ம் தங்களது. மதிப்பில் உயர்ந்து நிற்கும் கல்கத்தா பெருநகரில் சிறு மோத்திஜில் சேரியில் 1948 டிசம்பர் இறுதி வாக்கில் பள்ளியொன்றைத் திறந்து தங்களுடைய அன்புப் பணியை ஆரம்பித்து, இது நாள்வரை அல்லும் பகலும் ஆண்டவன் ஏசுவுக்காக மிக மிக ஏழைகளுக்குத் தொண்டு செய்து வருகிறீர்கள். ஆளுல், தாங்கள் மேற்கொண்டிருக்கும். உலகரீதியிலான அன்பின் பணி, உலகத்தை ஆட்டிப் படைக்கும் வறுமைப் பிர்ச்சனையோடு ஒப்பிடுகையில், மிகவும் சிறியது என்னும் உணர்வு தங்கட்கு எப்போ தாகிலும் எழுந்தது உண்டா?" அன்னை: அன்பு என்னும் மகா சமுத்திரத்திலே என் தொண்டு ஒரேயொரு துளிதான்; ஆலுைம், அந்த
பக்கம்:அன்னை தெரேசா.pdf/32
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை