33 ஒரு துளிப்பணி சமுத்திரத்தில் சேர்ந்திராமல் இருந்: திருந்தால், அந்த ஒரு துளி அளவிற்குச் சமுத்திரம் குறைந்திருக்கும்! அன்றைக்கு, அதாவது அநேக ஆண்டு களுக்கு முந்திய அன்றைக்கு, நடுவீதியில் இறந்து கொண்டிருந்த ஒரு நடுத்தெரு நாராயணனே நான் என் பணி மனேக்கு எடுத்துச் செல்லாமல் இருந்திருந்தால், இந்நேரத்தில் அப்படிப்பட்ட 43,000 அைைதகளுக்கு நான் அன்பு செய்திருக்க வாய்த்திருக்குமா, என்ன? ஏழைமை, பசி, வறுமை போன்ற உலகப் பிரச்னைகளைப் பற்றி ஆழமாக ஆராய்ந்து, அவற்றிற்கான காரண காரியங்களைப் பரிசீலிக்க எனக்கு நேரம் இல்லை. ஏழைகள் மற்றும் நோயாளிகளுக்கும் நேரம் கிடையாது. நாங்கள் ஆய்வாளர்கள் அல்லவே! - நாங்கள் பணியாளர்கள் தாமே?” - நாட்டில் தொன்றுதொட்டு மக்களுக்கு ச் சேவை செய்வதில் பல அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றன, காவல் நிலையத்தினின்றும் கைவிடப்பட்ட அைைதக் குழந்தைகளே ஏற்றுப் பராமரித்து மத அடிப்படையில் இயங்கும் அன்னமேரி தொண்டு மனை, மற்றும் வயதான ஏழைகளின் சின்னஞ்சிறு சகோதரிகள் பணி இல்லம் போன்றவை கல்கத்தாவில் பிரசித்தமானவை; இராம கிருஷ்ண மடம் சார்ந்த பாரத் சேவா சிரம சங்கம் போன்ற நிலையங்களும் தேசிய அளவிலே செஞ்சிலுவைச் சங்கங் களின் பாணியிலான நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதுடன், ஏழை வீட்டுச் செல்வங்கட்கு இலவசமான உணவுக்கும் படிப்புக்கும் வழி செய்தும் வருகின்றன. இருந்தும் கூட ஏழைகளில் ஏழைகளுக்கு இலவசமாக அன்புப் பணிகளைச் செய்து வருவருவதில்தான், தெரேசா அன்னை யின் "அன்பின் தூதர்கள் இயக்கப் பணி அமைப்பின் ஈடு எடுப்பில்லாத் தனிச்சிறப்பு, ஆழிசூழ் உலகின் அரங்கத்தில் தனித்தன்மை பெற்றுப் பட்டொளி வீசிக் கொண்டிருக்கிறது! -
பக்கம்:அன்னை தெரேசா.pdf/33
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை