. 36 வதைப் போலே, அன்றைக்கே சுவாமிகள் மனிதாபிமானம் திரம்பிய தீர்க்கதரிசனத்தோடுதான் ஏழைத் தொண்டின் மகிமை பற்றி இவ்வாறு அழகாகச் சொல்வியிருக்க வேண்டும்! - - வாழ்க்கைதான் வரலாறு ஆகிறது. இவ்விதிக்குச் சான்று ஆளுள் சிறுமி ஒருத்தி! அந்தச் சிறுமிதான் தெரேசா. தெரேசாவின் பிறந்தநாள் : 21.10.1910. தெரேசாவின் பிள்ளைப் பிராயத்துப் பெயர் அக்னெஸ். யூகோஸ்லாவியா நாட்டில் ஸ்கோப்ஜி எனப்பட்ட குன்றுகள் தழுவிய நாட்டுப்புறத்தில் விவசாயக் குடும்ப மொன்றில் பிறந்த அக்னெஸ், பன்னிரண்டு வயதுச் சிறுமி யாக இருந்த காலத்திலேயே, உள்ளுர் அரசாங்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே, கிறித்துவச் சமயச் சார்புடைய தோழமைக் கூட்டுறவுச் சபையில் அங்கம் வகித்தாள். அந்நாளில், திருச்சபைச் சமயக்குரு, மக்கட்பணிக்கான இயேசு பிரானின் தேவ அழைப்பு’ப் பற்றிச் செய்த பிரசங்கங்கள் சிறுமி அக்னெஸின், பிஞ்சு நெஞ்சில் புத்துணர்ச்சியை ஊட்டின. பல்வேறு உலக நாடுகளில் சேவை செய்து வந்த சமயப் பணியாளர்களேம் போலவே, தானும் அன்பு நலத் தொண்டில் ஈடுபட வேண்டுமென்ற விழிப்பும் பெற்ருர், மனிதப் பிறவி, தெய்வத்தின் அருட்பிரசாதம். வாழ்க்கை, அதற்குக் கூத்து மேடை. வாழ்க்கை சாகவதம் அல்ல. ஆனல், வாழ்க்கையில், மனிதனின் ஜீவன் நிலை பேறுடையது அல்லவா? ஜீவனின் ஆன்மா சிரஞ்சீவித் தன்மை பெற்றதாயிற்றே? .
பக்கம்:அன்னை தெரேசா.pdf/36
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை