48 தூண்டுதலால் உருப் பெற்று, வளர்ச்சியடைந்து கொண் டிருந்த மக்கள் நலப் பொதுப் பணிக்கான நற்கனவை வாழ்த்துகிற மாதிரி, அவளுடைய உள்ளுணர்வில் ஒலித்த கர்த்தரின் முதல் ஆணையை ஏற்று அதற்கேற்பச் செயற் படும் புனிதமான குறிக்கோள் பூண்டு, அயர்லாந்தில் தனது தவப்பணிக்கான பயிற்சியை முடித்துக்கொண்டு 1929 ஆம் ஆண்டில் மாரிக் காலத்திலே பி.அண்ட் ஒ' எனும் கப்பலில் ஏறி இந்திய நாட்டில் கல்கத்தாத் துறைமுக நகரை வந்தடைந்த தெரேசா லொரெட்டோ மடத்தின் ஆனந்தமான இனிய சூழலில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளைக் கழிக்க நேர்ந்தது. இருபது ஆண்டுகளின் (1929. 1948) கால நடையில், முதலில் அக்னெஸ் ஆகவும், பிறகு தெரேசா ஆகவும் வங்காளச் சமயப் பரப்புக் குழுமத்தின் மைய நிலையமான லொரெட்டோ கன்னியர் மடத்தில், மாடக் கன்னிகையாக, அதாவது, கிறிஸ்தவத் துறவிப் பெண்ணுக வாழ்ந்து பணி புரிந்த அந்த ஒவ்வொரு நாளிலும், திருச்சபை விடுதியின் சாரளங்களின் வழியாகக் காட்சியளித்துச் சுற்றுமதிற் சுவர்களினின்றும் பிரிந்து, nல்டா ரயில்புறம் வரையிலும் அவலட்சணமாகவும், அலங்கோலமாகவும், கேட்பாரற்றும் கவனிப்பார் இல்லாமலும், சிதறிக்கிடந்த மோத்திஜில் சேரிக் குடிசைகளையெல்லாம் ஆயிரம் தரம் பார்த்துப் பார்த்து, அந்த ஏழைகளுக்காக அைைதகளுக்காக வருந்திக் கண்கலங்கியதெல்லாம் வெறும் கதை அல்லவே? சோகச் சிதறல் இன்னென்று: அக்னெஸ் தலைமை ஆசிரியையாக அப்பள்ளியை நிர்வாகம் செய்து கொண்டிருந்த சமயத்திலேதான், இரண்டாவது உலகயுத்தம் அமர்க்களப்பட்டுக்கொண் டிருந்தது. ஜப்பான் விமானங்கள் கல்கத்தா நகரை, நிர்த்துளியாக்கியதால், ஏற்கனவே பஞ்சத்தால் அடி. பட்டுக்கிடந்த அடித்தள மக்கள், யுத்தத்தின் எதிர் விளைவாலும் மோசமடைய நேர்ந்தது. ஆங்கில
பக்கம்:அன்னை தெரேசா.pdf/48
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை