49 ஆதிக்கத்தில் அடிமைப்பட்டுக் கிடந்தாலும், ரம்மியமான நகரங்களில். ஒன்ருகப் பொலிந்த கல்கத்தா அந்நேரத்தில் பினவாடை வீச, சின்னபின்னம் அடையவும் வேண்டிய தாயிற்று. ஏழை எளியவர்களென்ருல், சாவுக்குக்கூட இளக்காரம்தான் போலும்! இடையிலே நின்ற காலவெளியில், 1931-ல் முதலாவது சுயகட்டுப்பாட்டுச் சங்கற்பத்தை ஏற்ற சகோதரி அக்னெஸ், தெரேசா என்னும் புதிய பெயரையும் ஏற்றுப் பிறகு, 1937-ல் இரண்டாவது நோன்பு உறுதிப் பிரதிக் கினேயையும் மேற்கொண்டு, கிறித்தவ நெறி முறை களுக்கு ஏற்ப, முழுமை வாய்ந்த துறவறக் கன்னிகை தெரேசாவாக (Sister Teresa) உருக்கொண்டார்! நாட்கள் தொடர்ந்தன. இந்நிலையிலே... தெரேசாவின் ஏக்கமும் தவிப்பும் உச்சம் அடைய லாயின. அன்பின் துளிகளைப் பருகிடத் தணியாத தாகத்துடன் அலையும் சக்கரவாகப் புட்களாக அங்கும் இங்கும் அலைந்து திரிந்துத் தத்தளித்துக்கிடந்த மக்களுக்குவாழ்க்கையின் பலகோணச் சோதனைகளை எதிர்கொள்ள முடியாமல் நரகவேதனையை அனுபவித்து ஊசலாடிக் கிடந்த மக்களுக்கு அன்பு செய்யவும் அன்புப் பணி செய்யவும் வாய்க்கக் கூடிய அந்த ஒரு புண்ணியதினமே தன்னுடைய வாழ்வில் அமைதியை ஏற்படுத்தவல்ல ஆனந்தத் தவநாளாக அமைய முடியுமென்ற கவலையிலும் உறுத்தலிலும், அவருக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகவே மாறத் தொடங்கியது! - லொரெட்டோ கன்னி மாடத்தின் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுப் புழுங்கிக் கிடக்கின்ற எனக்கு உரிய விடுதலை கிடைக்கவும் என்னுடைய மக்கட் தொண்டுக் கனவு பவிதமடையவும் உரித்தான நல்ல பாதை ஒன்றை விரைவிலேயே காட்ட மாட்டீர்களா, பிதாவே? ஏழைமைத் தொண்டுதான்
பக்கம்:அன்னை தெரேசா.pdf/49
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை