55 புதிய உள் ஒளியை பெறக் கொடுத்துவைத்த புண் ணிய தினமாகவும் அந்நாளே சகோதரி தெரேசா மதித்தார்! அந்த நன்னளைத் தன்னுடைய பணிவாழ்வின் நெடுகிலும் கொண்டாடித் தொழுது போற்றவும் துறவுக்கன்னி தெரேசா திட்டமிட்டதும் இயல்பு! "1945 செப்டம்பர் 10-ல் நான் டார்ஜிலிங் ரயில் பயணத்தைத் தொடர்ந்த அந்நேரத்தில், என்னுடைய தெய்வத் தலைவனின் தெய்விகமான அழைப்பை, அழைப்பில் ஓர் அழைப்பாகவும், அழைப்பிற்குள் ஒர் அழைப்பாகவும் மிகத் துலாம்பரமாகவே நான் கேட்டேன்! -ஆண்டவன் என்னிடம் தெரியப்படுத்தின இரண்டாம் கட்டளைச் செய்தி அது! --உடனடியாகவே நான் லொரெட்டோ கன்னிமாடத்திலிருந்து விலகி, ஏழைகளின் ஏழைகளுக்கு நடுவில் வாழ்ந்து, ஏழைநல அன்புப்பணி செய்ய வேண்டுமென்பதுதான் அச்செய்தி! -செய்தி அல்ல! - அது ஆண்டவன் எனக்கு இட்ட புதிய கட்டளே!' முன்னம் கல்கத்தாவில் தூய இருதய மாதாகோயிலின் மதக்குருவாக விளங்கிய லெ ஜலி (Le jelly)யிடம் தெரேசா மனந்திறந்து இவ்வாறு கூறியதும் மெய்!... தெரேசா உடல், பொருள், ஆவி அனைத்தையுமே காணிக்கை வைத்துப் பின்பற்ற வேண்டிய புனிதமானபயண வாழ்க்கைக்கு - புத்துலக வாழ்க்கைப் பயணத் திற்கு உரியதான-நல்வழி இப்போது அவருக்குத் தெரிந்துவிட்டது; தெளிந்து விட்டது! - . புனிததெரேசா ஊன் உருக, உள்ளம் உருக, கண்கள் உருகி நிரம்பிக் கண்ணிர் பெருக, அப்படியே மெய்ம் மறந்து வீற்றிருந்தார். "அன்பே தெய்வமான கர்த்தர் பிரானே உலகத்தின் ஏதோவொரு முடுக்கிலே உழன்று தங்களது பேரன்பிற்காகத் தவங்கிடந்து தவித்து உருகிக் கொண்டிருந்த எளியவளான என்னைக் கடைத்தேறச் செய்திட, தாங்கள் நாளும் பொழுதும் பரிசுத்த நற்கருணை
பக்கம்:அன்னை தெரேசா.pdf/55
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை