56 யால் போதித்த அன்பிற்குத் துரது செல்லும் மேலான தொரு நற்பணிக்கு என்னத் தேர்ந்தெடுத்து, ஆணையிட்டுச் சரியான பாதையையும் காட்டி விட்டீர்கள்! - என் முயற்சிகளுக்குத் துணைநின்று, என் புனித முயற்சிகள் எல்லா வகையிலும் வெல்லவும் அருள்புரிய வேண்டும், அன்புத் தந்தையே!’ ஜபம் தொடர, கண்ணிரின் மாலை தொடர்ந்தது:- "பணிவிடைகளைப் பெற வரவில்லை; பணி விடைகளேச் செய்யவே வந்தேன்!” என்று கூறி, ஆனந்த மான பரவசத்தில் ஆறுதல் கனிய விம்மினர் சகோதரி. டார் ஜிலிங் பயணத்தை விரைவாகவும் சுருக்கமாகவும் முடித்துக் கொண்டு, தெரேசா லொரேட்டோசபைக் கன்னிகையாகக் க ல் க த் த ைவ வந்தடைந்ததுதான் தாமதம்; உடனடியாகவே, தனது ஆன்ம குருவாகத் துணை நின்ற தவத்திருத்தந்தை வான் எக்ஸெம் (Father Van Exem) அவர்களேக் கண்டு, ஆண்டவன் காட்டிய புதிய பாதையில் மலர்ந்த ஏழை நல அன்புப் பணி குறித்த தனது புதிய திட்டத்தை விவரக் குறிப்புக்களே விளக்கினர். எண்ணங்கள் செயல் வடிவம் பெறுவதில் குறுக்கே மறித்து அனுபவரீதியிலான தடங்கல்களே ஆன்ம குரு எடுத்துச் சொல்லச் சொல்ல, தெரேசாவின் வைராக்கியம் தீவிரம் அடையவே செய்தது. எல்லாம் ஆண்டவன் செயல்!” என்று ஏசுவின் பேரில் பாரத்தைப் போட்டுவிட்டு, ஆகவேண்டிய காரியங்களைச் .ெ ச ய் ய வு ம், எடுத்த காரியத்தில் வெற்றியைத் தொடுக்கவும் முனைந்தார். கிறிஸ்தவத் திருச்சபையின் மேலிடங்களின் முறையான அனுமதியோடும்ஆசியோடும்லொரெட்டோ கன்னிமாடத் திவிருந்து விடைபெற்று, சமயக் கோட்பாடுகளுக்கும் கட்டுப் பாடுகளுக்கும் இணக்கமாகவே நகரின் சேரிப்பகுதிகளில் ஏழைகளோடு ஏழையாக வாழ்ந்து, அம்மக்களுக்குரிய நற்பணிகளையெல்லாம் செய்திட வேண்டுமென்ற தன் திட்டத்தை வெற்றிகரமாகச் செயற் படுத்தவும் முனைந்தார்.
பக்கம்:அன்னை தெரேசா.pdf/56
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை