4. தருமம் வெல்கிறது 1948, ஆகஸ்ட், 8 ஆம் நாளில், புனித சகோதரி தெரேசா சுதந்தரப் பறவை ஆளுர்! - கட்டுத்திட்டங்கள், ேசா த னை க ளே நடத்திய லொரெட்டோ கன்னியர் மடத்தை விட்டுப்பிரிந் தாலும், கிறித்தவத்தின் உள்ளார்ந்த நெறிமுறைக் கோட்பாடுகளினின்றும் சிறிதும் பிரியாத புனிதக் கன்னிச் சகோதரியாகவே, உலகிடை அன்பிற்குத் தூது செல்லத் தயாராகி விட்டார்! 'யாதும் ஊரே யாவரும் கேளிர்!’ என்றுமுள தென்றமிழின் முதுபெரும் புலவர் பூங்குன் நனரின் திருவாய் மொழிக்கு மெய்யான காட்சியாகச் சகோதரி தெரேசா இன்று விளங்கி வரும் உண்மை நிலைமையை ஊர் உலகம் உய்த்துணரும்!-ஆனல், அன்று சகோதரி தெரேசாவாக நடமாடித் தனி ஒருத்தியாகவே அன்புப்பணி செய்யத் தொடங்கிய காலத்திலேயே அவரது துறவறக்கன்னி மனம் உலகப் பொதுமையான ஏழை நல அன்பமைதித் தொண்டிலேயே பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்த அந்தரங்க சுத்தமான உன்னதை நிலையை உணர்ந்தறிந்தவர் ஒரேயொருவர்தான்! கர்த்தர் பிரானே! பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பிரிந்து, பொது நன்மைத் தொண்டுகளில் மனம் லயித்துத் தன் வாழ்க்கை
பக்கம்:அன்னை தெரேசா.pdf/58
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை