59. யின் நாட்கள் முழுவதையும் முற்றும் துறந்த இளந்துறவி. யாகவே கழித்தவள் கோவலன் - மாதவி பெற்ற, அருமைத் திருமகளான அறத்தின் நாயகி மணிமேகலை. மண்ணின் பசிப்பிணி போக்க, ஒர் அமுதசுரபியைத் துணை கொண்டு இயங்கிய காப்பியத் தலைவி! ஐந்து பெருங்கண்டங்கள் ஆரத்தழுவிய பூத லத்தில், அன்பிற்கு ஓர் அன்னையாக - கடைதிலே மக்களுக்கு வாய்த்த ஒப்புயர்வற்ற அன்னேயாக இன்று விளங்கி வருகின்ற தெரேசா, அன்று மற்றுமொரு மணிமேகலை, ஆஞர். அன்பைத் தேடித் தேடி அலுத்துச் சலித்து, உருகி உருக்குலேந்து கொண்டிருந்த உள்ளங்களைத் தேடித் தேடி அன்பை வாரி வாரி வழங்குவதிலும், பற்றுக்கோடு ஏதுமின்றி வாழ்க்கையின் எல்லாவிதமான நிலைப்படி களிலும் போராடித் தத்தளித்துக் கொண்டிருந்த ஏழை மக்களேச் சந்தித்துத் தானே அவர்களுக்குப் பற்றுக் கோடு ஆகி ஆறுதல் அளிப்பதிலும், சேரிப் பகுதிகளுக் கெல்லாம் சென்று, ஒதுக்கப்பட்ட மக்களுடைய வாழ்க்கை நிலவரங்களே நேருக்கு நேர் கண்டு, கேட்டு, இருண்ட அவர்களது உள்ளங்களில் நம்பிக்கைச் சுடர் ஏற்றி, அவர்களையெல்லாம் சமாதானப் படுத்துவதிலும், தொடங்கவிருக்கும் அன்புத் துனது இயக்கம் சகல வகை களிலும் சிறக்கவும் நிறக்கவும் தேவையான சகல வகை யான ஒத்துழைப்பையும் வல்லமையையும் வாழ்த்தையும் ஆசியையும் வழங்குமாறு எல்லாம் வல்ல இறைவனிடம் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கிப் பிரார்த்தன செய்வதிலும் நாட்களை எண்ணி எண்ணி, செலவு செய்தார் தெரேசா-அன்பின் சேவகியின் உள்ளக்கிழியில் ஏழை உலகு நிழலாடுகிறது; அன்பு உலகு ஒளியாடுகிறது! அன்பே உயிராகவும் உயிர்ப்பாகவும் விளங்கக்கூடிய மக்கள் நலப்பணிகளை சமயத்தின் துணையுடன் ஓர் இயக்க
பக்கம்:அன்னை தெரேசா.pdf/59
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை