பக்கம்:அன்னை தெரேசா.pdf/6

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அன்னை தெரேசாவின் அருள் மொழிகள்

ஏசு அடைகின்ற ஆனந்தத்தை நாங்கள் எங்களது அன்புப் பணிகள் மூலம் வெளிப் படுத்துவோம்.

  • * *

ஏழைகளின் சிரிப்பிலே இறைவன் ஏசுவைத் தரிசிக்க முடியும்.

  • * *

நாமெல்லோரும் மற்றவர்களே நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அயலவர்களிடம் அன்பு பாராட்டத் தெரிந்து கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் பாசம் சொரியப் பழகிக் கொள்வதும் அவசியம். அப்பால், அந்த அன்பை, நேசத்தை, பாசத்தை ஏற்றுக்கொள்வதற்கும் நாம் பழகி விடுவோம்.

  • * *

நாம் நல்லமைதியின் கால்வாயாக-வாய்க் காலாக விளங்க வேண்டும்.நமது அன்பு நம்மைத் தொல்லைப்படுத்தும் வரை, நாம், அன்பை வழங்கிக் கொண்டே இருக்கவேண்டும்.

  • * *

ஆண்டவரே! உலகினின்றும் பசியும், பட்டினி யும், வறுமையும், வெறுமையும் வெகுவிரைவில் விடுதலை பெற ஆசி புரியுங்கள்.

  • * *

அன்பின் பலன்தான் சேவை. சேவையில்தான் அமைதி கனியும். நேசத்திலும், தொண்டிலும், சமாதானத்திலுமே ஆண்டவன் சிரிப்பான்!

  • * *
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/6&oldid=1054381" இலிருந்து மீள்விக்கப்பட்டது