நாள்: 21. திங்கள்: டிசம்பர் ஆண்டு: 1948. # ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று பாரதச் சமுதாய மக்கள் அனைவரும் ஒன்றெனக் கூடியும் ஒன்று கூடியும் பள்ளுப்பாடி ஆடி மகிழ்ந்து கொண்டிருந்த பாரதத்தின் தாய் மண்ணில் கல்கத்தா நகரில், பால சந்தியாசினி சகோதரி தெரேசா அன்புநலத் தொண்டு களே முறையாகத் தொடங்கிய நேரம் அது! மிக மிக எளிமையானதொரு மாட்டுத் தொழுவம் தான் இயேசு பெத்லெகமின் அன்பு சால் தியாகப்பணிப் பயணத்திற்குத் தொடக்கம் இட்டது அல்லவா? அதைப் போலவே, பரிசுத்த சகோதரி தெரே சாவின் பரிசுத்தமான அன்பின் பணி வாழ்க்கையும் ஒரு சேசியிலிருந்து ஆரம்பமாக வேண்டுமென்பதுதான் ஆண்ட வனின் திருவுள்ளம் கொண்ட நியதிபோலும்! அது: மோத்திஜில் சேரி! அதுவே, சிலுவைத் தெய்வத்தின் சேரி: அங்கேதான், இன்று அகில உலகத்தின் அன்புப் புகழை ஒருங் கிணைந்து பெற்றுத் திகழ்கின்ற அன்புத் துாதுப் பணித் தலைச்சன் குழந்தை பிறந்து, முதன் முதலில் குவா, குவா வென்று முதற்குரலையும் வெளியிட்டது. சேரிப் பகுதிகளிலே அங்கும் இங்குமாகவும் அப்படி யும் இப்படியுமாகவும் சிறுவர்களும் சிறுமியரும் அன்பை மறந்து, பசியையும் மறந்து, ஏன், விதியைக்கூட மறந்து ஆடிப்பாடிச் சடுகுடு விளையாடிக் கொண்டிருக் கிருர்கள்! T . . . . . - அன்பைச் சுமந்து, அன்பைத்தேடி, ஓர் அன்னையின் பரிவோடும் பாசத்தோடும் அன்போடும் அக்கறையோடும்
பக்கம்:அன்னை தெரேசா.pdf/62
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை