65 நாட்கள் நான் கஷ்டப்பட்டிருப்பேன்; அதற்கே இந்தப் பாடு என்ருல், பொழுது விடிந்து, பொழுது போனல், பிரச்சினை ஆகிவிட்ட வாழ்க்கையோடு-பிரச்சினைக்கு உரியதென ஆகிவிட்ட வாழ்க்கையோடு சோற்றுக்காகவும், துணிமணிக்காகவும், நிழலுக்காகவும் போராட்டம் நடத்துவதையே தங்கள் தொழிலாக-வாழ்க்கைத் தொழி லாகக் கைக் கொண்டுள்ள சேரி மக்கள் அனுபவிக்கும். கஷ்ட நஷ்டங்களிலே அவர்கள் எத்தனை பாடு படுவார் களோ?-பாவம் அகம் காட்டின புன்னகையில், சோகம் இறுதியிலே முகம் காட்டவே, பிறர் துயரைத் துயராக உணர்ந்து வருந்திய அவரது உள்ளம், அகம் காட்டி, முகம் காட்டிய சேரி மக்களின் நிமித்தம் அனுதாபப்பட்டது. துயரப்படுபவர்களைப் பாக்கியம் அடையச் செய்யுமாறு: வழக்கமான நன்னம்பிக்கையுடன் ஜபம் செய்தார். மறுநாள்: அந்தச் சேரிக் குடிசையில்தான், அன்னை தெரேசாவின் கருணை இல்லத்தின் முதற் பள்ளி ஆரம்ப மாயிற்று! அந்த எட்டடிக் குடிலுக்கும் சரித்திர அந்தஸ்து கிடைத்தது!-அது ஒர் ஒப்பற்ற ஆலமரம் போல! - இன்று உலகத்தின் முக்கியமான தேசங்களி லெல்லாம் வேரோடி, விழுது பாய்ந்து, படர்ந்தும் பரவியும் வளர்ச்சியடைந்துள்ள அன்புத் தூதுவர்களின் மக்கள் நலப் பணி இயக்கத்தின் பல்வேறு அமைப்புக்களுக் கெல்லாம் அந்தச் சேரிக் குச்சு’தானே தாய்வீடு' பராசக்தியான அன்னையின் வடிவம் எடுத்த தெரேசா. அந்தக் குடிலே எழுத்தறிவிக்கும் பள்ளியாக ஆக்கிக் கொண்டார். * இளங்காலைப் பொழுதில், அந்தக் குடிசைப்பள்ளிபள்ளிக்கு டிசை அலங்கோலமாகவே தரிசனம் தருகிறது. அன்ன தெரேசா அரைக் கணம் விசுவாசத் தியானத்தில் லயித்தார். எனது தெய்வத் தந்தையே, உங்கள் அன்புப் பணி ஒரு மாட்டுத் தொழுவத்திலிருந்து
பக்கம்:அன்னை தெரேசா.pdf/65
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை