66 ஆரம்பமானதைப் போல என் அன்புத்தொண்டு ஒரு சேரியிலிருந்து புறப்பட வேண்டுமென்பதுதான் உங்களது திருவுள்ளம் போலும்! "உன் கடன் பணி செய்து கிடப்பதே என்று எனக்கு இருமுறை வழங்கிய கட்டளையை வெற்றியுடன் தொடர்ந்து நடத்தவும் தாங்கள்தானே அருள் புரியவேண்டும்!” - நீர் விரித்து அகல விரிந்த அழகான கண்களில் தென்பட்ட அந்தக் குடிலின் பின்னணியிலே ஒர் ஆலமரம் தரிசனம் கொடுத்ததை உணர்ந்தறிந்ததும், அன்னையின் அகமும் புறமும் சிலிர்த்தன. அன்பு எனும் ஆலமரத்தின் நம்பிக்கை என்ற விழுதுகள் நாற்புறமும் வேரோடத் தொடங்கின. பொழுது வளர்ந்தது. சேரியின் சந்துகளும் பொந்துகளும் வளர்ந்தன. தெரேசா அன்னையின் அன்பிலும் பக்தியிலும் பாசத்திலும் ஊறித் திளைத்த நம்பிக்கையும் வளர்ந்தது. திடநம்பிக்கை : அது ஆண்டவனின் நன்கொடை! நம்பிக்கைக் கொடை நாளும் வளர்ந்தது; பொழுதும் வாழ்ந்தது. இன்றைய அன்பின் தொண்டர்களின் (Missionaries of Charity) இயக்கம், அன்று தனது தெய்வத் திருப்பணிகளை தடைமுறைப் படுத்துவதற்குத் திருக்கோயில் ஒன்றினேக் கண்டது; கோயில், கருவறையையும் கண்டது. கரைகண்ட அமைதியில் நல்ல மூச்சை வெளியிட்டார். புனிதை தெரேசா. அமைதியில் ஆனந்தமும், ஆனந்தத்தில் அமைதியும் அடைந்தார். இதுவரை, கல்கத்தா நகரிலிருந்த எந்த ஒரு பள்ளிக் கூடமும் எந்த ஒரு சேரிப்பிள்ளையையும் விரும்பியதும் இல்லை; ஏற்றதும் கிடையாது. : - இந்நிலையில், சேரிக்குழந்தைகளின் வாழ்க் கைப் புத்தகத்தில் புதிதான அத்தியாயம் ஆரம்பமாகியிருக் கிறது!
பக்கம்:அன்னை தெரேசா.pdf/66
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை