70 என்னவோ, சத்தம் கேட்டது. அன்னை ஏறிட்டு விழித்தார். புதிய உள்ளமும் புதிதான உறவும் கொண்டு, வேறு பல குடில்களைத் தழுவிய வேறு சில சிறுமியர்களும் சிறுவர்களும் பயபக்தியுடன், கைகளைக் கட்டிக்கொண்டு காட்சியளிக்கின்றனர். அன்பிற்கு விசாரணை நடத்தவும் தெரிந்திருக்க, வேண்டும். விசாரணை நடத்திய மாதா 'ஒ' என்று ஆச்சவியப் பட்டு, பிறகு, ஓ.கே!' சொல்லிவிட்டார். குழந்தைகள் ஆனந்தக் கூத்திட்டனர். அம்மைக்கும் அம்மையப்பன் ஆகி ஆனந்த நடனம் செய்யவேண்டுமென்று ஆவல் கிளர்ந்து எழுந்தது; அவரது உள்ளமும், உள்ளத்தின் உள்ளமும் அவ்வாறே ஆனந்தத் தால் நடனம் ஆடின! - ஆன்மநேயம் ஆனந்தத்தால் நிரம்பி வழிகிறது; ஆறுதல் அடைகிறது. கைவசமிருந்த மூலதனமான ஐந்தே ஐந்து ரூபாயில் உருவான - உருவாக்கப்பட்ட அந்தச் சேரிக்குடில் பள்ளி வளர்ந்தது. மாணவ - மாணவியர் எண்ணிக்கை ஐந்திலிருந்து பதினென்று ஆகி, பதினென்றிலிருந்து இருபத்தி ஒன்று. ஆகக் கூடியது; நாளடைவில் நூறு ஆகவும், பின்னர், நூற்றுக்கணக்கிலும் உயர்ந்தது. அன்புக்குத் தூது செல்லவும், அன்புக்குத் தொண்டு. செய்யவும் அன்னே ஆரம்பித்திருந்த அணியும் வளர்ந்தது. மக்களின் மேம்பாடு கருதி, அன்னை மேற்கொண்டுள்ள - மெய்ஞ்ஞான வேள்வியில் தன்னை அர்ப்பணம் செய்து கொள்ளத் தயாரான இரண்டாவது கன்னிப்பெண் சகோதரி ஜெர்த்ரூத். இவ்வாறு, சகோதரி ஃபிளாரென்ஸ்,
பக்கம்:அன்னை தெரேசா.pdf/70
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை