80 காகிலும் இடம் ஒன்று வேண்டாமா? அதற்காகவேதான், ஓர் இடத்தைக் கேட்கிறேன்; பாவப்பட்ட ஏழைகளும் ஆண்டவளுல் படைக்கப்பட்ட ஜீவன்கள் தாமே? - தாங்கள் வேண்டப்படாத ஜன்மங்கள் என்கிற மன நிலையில் வெந்து நொந்து, வீதிகளிலே அணு அணுவாகச் செத்து மடிந்து கொண்டிருக்கிருர்கள். அப்படிப் பட்டவர்களின் மனங்களில் தாங்களும் பிறரால் விரும்பப் படுகிறவர்கள் தாம் என்னும்படியான ஒர் அமைதியை ஏற்படுத்தவும், அதன் பலகை, அவர்கள் நிம்மதியுடன் சாகவும் ஏற்பாடு செய்வதற்குத் தாங்கள் இடம் ஒன்றை ஏற்படுத்தித் தந்தால் நலமாயிருக்கும்!” அன்னை தெரேசாவின் கவலையும் கருத்தும் கொண்ட பேச்சு அதிகாரிகளின் ஆணவம் கொண்ட கல் இதயங்களில் மனிதாபிமானத்தின் உணர்வுகளைத் தேடி த் தேடித் தொட்டிருக்கவேண்டும். உடன், அவர்கள் மாநகராட்சி மேயரிடம் அன்னையை அழைத்துச் சென்றனர். மேயரைச் சந்தித்ததில், அன்பான மரியாதையையும் சந்தித்தார் அன்னை! - வாழ்க்கைக் களத்தில் போராடிப் போராடி அணு அணுவாக இறந்து கொண்டிருந்த அனதை கள் இந்த மண் உலகில் உயிர் தரித்திருக்கக் கூடிய அந்த ஒரு சில நாழிகைப் பொழுதிலாவது அமைதி அடைந்ததும் தங்களை அன்புடன் விரும்புவோரும் இவ்வுலகில் இருக்கத் தான் இருக்கிருர்கள் என்னும் நல்லுணர்வுடன் அவர்களது அந்திமப் பொழுதைக் கழிக்கச் செய்ய உதவும் வகையில், அவர்களுக்கு நிழல் ஓர் இடத்தைத் தந்து உதவும்படி மேயரிடமும் விண்ணப்பம் செய்து கொள்ளத் தவறிவிட வில்லை அன்னே! - - - அன்பின் நெகிழ்ச்சியில், ஆணை பிறக்கிறது; பிறப்பிக்கப்படுகிறது. கல்கத்தாப் பிரசித்தம்' ஆன அம்பிகை காளிக்கு உடைமை பூண்ட திருக்கோயில் அது. - அடுத்து அமைந்திருந்தது தர்ம சாலை மன.
பக்கம்:அன்னை தெரேசா.pdf/80
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை