82. அன்னை தெரேசா, இல்லத்தின் முகப்பு வெளிக்கு வந்தார். பொய்யும் புரட்டும் நிறைந்து, புரட்சிக்கோலம் தாங்கி வந்து நின்று கொண்டிருந்த கூட்டத்தினரின் கூச்சல், தமது நெஞ்சின் அடிவாரத்தில் எதிரொலிக்க, அன்னை வெகு நிதானமாகவே கூட்டத்தைச் சுற்றிச் சூழப் பார்த்தார்; பார்வையிட்டார். 'தெய்வ நம்பிக்கை என்கிற பக்குவம் நிரம்பின மனப் பண்பு எல்லா மக்களுக்கும் எல்லா மதத்தினருக்கும் சொந்தமானது; பொதுவானதுங்கூட - ஆதலால், நாங்கள் நடை முறையிலே செயலாற்றிவருகிற பொது நல அறப்பணி களுக்கு உங்களால் ஒருநாளும் ஒருபோதும் மாசு கற்பிக்கவே முடியாது; தரும்த்தின் பேரால் நாங்கள் செய்து வருகிற சேவை தெய்வத்தையும் தெய்வச் சக்தி யையும் சாட்சியாகக் கொண்டது என்பதையும் தீங்கள் மறந்துவிடாதீர்கள்!” - மனிதாபிமானம் இழந்தவர்களின் கூட்டுக் கூச்சல் மனிதாபிமானம் இழந்ததாகத்தானே இருக்கமுடியும்? நாடுகடந்த அன்பும் மதம் கடந்த பாசமும் இனம் தாண்டிய பரிவும் பூண்டொழுகிச் செயற்பட்டு வந்த அன்னே உடனே வெளியேற வேண்டுமாம்!- கூக்குரல் மண்ணையும் முட்டாமல், விண்ணையும் முட்ட முடியாமல் திரிசங்குச் சொர்க்கத்தில் ஆடியது; ஊசலாடியது! - அன்னை காளியை நெஞ்சில் நினைந்தார் அன்னை தெரேசா; விழிகளில் ஈரம் நனைந்தது: 'உங்களுக் கெல்லாம் வேண்டாதவள் - வேண்டப்படாதவள் நான் தானே? - நீங்கள் என்னைக் கொல்ல விரும்பினல், இதோ, இப்பொழுதே, இங்கேயே என்னைக் கொன்று விடுங்கள்!நான் தயார்!- ஆனல், ஒன்று: உள்ளே எங்களது அன்பின் நிழலில் கடைசி விடிை ஆறுதலோடு அடைக்கலம் அடைந் திருக்கும் அந்த ஏழைகளின் அமைதியைக் கலைத்து விடாதீர்கள்!- அவர்களை அமைதியுடன் சாக விடுங்கள்!"
பக்கம்:அன்னை தெரேசா.pdf/82
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை