84 கத்தின் காப்புக்காகவும் பாதுகாப்புக்காகவும் சிந்தனே செய்யவேண்டியவராகவும் ஆனர். தமது ஆன்ம குருவான த்வத்திரு வேன் அவர்களையும் கலந்து ஆலோசனை நடத்திய பிறகு, தம்பேரில் மதிப்பும் மரியாதையும் வைத் திருந்த கல்கத்தக நகரத்தின் காவல் துறை ஆணேயாள ரான நிரத் செளத்ரியிடம் முறைப்படி முறையிடவும் செய்தார். ஆண்டவனின் செல்வங்களான அனுதை களுக்கும் ஏழைகளுக்கும் பிணியாளர்களுக்கும் அவசியப் பட்ட பொதுநலச் சேவைகளைச் செய்து வரும் தமது அறப் பணி அமைப்பின் சத்தியமான தார்மீகக் குறிக்கோளை உணர்ந்துகொள்ளாமல், தமது இயக்கம் மதமாற்ற நோக்கத்துடன் ஈடுபட்டிருந்ததாகத் தவறுபடக் கருதி, வன்முறைச் செயல்களில் முனைந்திருந்த தருமசாலப் பகுதிக் காளிகோயில் பூசாரிகளின் அத்துமீறிய, அதர்ம மான கிளர்ச்சிகள் பற்றி விளக்கமாகவே எடுத்துரைத்தார். சட்டத்திற்கு நியாயம் பேசத்தெரியாதா, என்ன? என்ருலும், அநியாயமான செயல் முறைகள், சட்டத்தின் கண்களில் குறுமணலைத் துரவிக் கொக்கரிக்கத் தவறுவது சகஜம் தானே? கெட்டவர்களுக்குக் கடைசிப் புகல் அளிக்கவல்லது அரசியல் என்பார்கள். அதே அரசியலைச் சார்ந்தவர்கள், கெட்டவர்களின் கடைசி ஆதரவாக விளங்கவும் தவறுவது கிடையாது அல்லவா? ஆதலால் தான் : காளிகோயில் அடியவர்களும் பக்தர்கள் எனச் சொல்லிக் கொண்ட மதவாதிகளும்-ஊகூம், மதவெறியர் களும் இப்பொழுது வட்டாரச் செல்வாக்குப் பெற்றிருந்த ஒர் அரசியல் பெரும்புள்ளியைச் சந்தித்து, அன்னை: தெரேசாவின் அன்புப் பணி அமைப்பைத் தருமசாலே
பக்கம்:அன்னை தெரேசா.pdf/84
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை