85 வட்டத்தினின்றும் அப்புறப்படுத்தும் கடைசி முயற்சியை க1ம் மேற்கொள்ளத் துணிந்தனர். வட்டச் சார்பான அரசியலில், வட்டாரச் சார்பான பொதுப்படை விண்ணப்பங்கள் உடனுக்குடன் கவனிக்கப் :படாமற்போனல், அப்பால், சம்பந்தப்பட்ட அரசியல் வாதிக்குப் பொதுமக்களின் சம்பந்தம் தொடர்பறுந்து போய்விட நேரும்! - எனவே தான், அந்த அரசியல் தலைவர், காளிகோயில் பூசாரிக் கும்பலின் விண்ணப் பத்தைக் கவனித்து, உடன் ஆவன செய்வதாக வாக்குக் கொடுத்தார் : 'ஊரெங்கும் பொதுவிலே பிரமாதமாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிற முறையிலே, தெரேசா அம்மையின் தருமத் தொண்டுகள் உண்மையிலேயே பொதுநல நோக்கத்தோடுசெ யற்படவில்லை என்பதாகவோ, அல்லது, கிறித்தவ மதம் சாராத் மற்ற மக்களையெல்லாம் கிறித்தவ மதத்திலே சேர்த்துக் கொள்ள வேண்டுமென்கிற தனிப்பட்ட நோக்கத்தோடேயே, பொதுநலத் தொண்டு என்கிற பொதுப்படையான பேரிலே யும் பேராலேயும் இம் மாதிரியான போலிப் பணிகள் இயங்குகின்றன, அல்லது. இயக்கப்ப்டுகின்றன என்பதாகவோ, நான் சோதனை நடத்துகையில், தெரிய வந்தால், உங்கள் விருப்பப்படி, அந்த அம்மையின் இயக்கத்தை இந்தக் காளிகோயிலின் தருமசாலைச் சுற்றுவட்டத்திலிருந்து உடனடியாகவே அப்புறப்படுத்த ஆவன செய்வேன் என்றும் தாங்கள் நிச்சயம் நம்பலாம்' என்று உத்தாரம் அளித்தார். சோதனை நடைபெற்றது. அரசியல் தலைவர், அதிர்ச்சி அடைந்தார்; அது ஆச்சரியத்தால் விளந்திட்ட அதிர்ச்சி! "ടുള്ള உண்மையோ, எதெது யோக்கியமோ, எதெது நியாயமோ, எதெது. தூய்மையோ, எடுதது அன்பிற்குரியதோ, எதெது நற்கீர்த்தியோ, எதெது.
பக்கம்:அன்னை தெரேசா.pdf/85
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை