10
வழி சொல்லி வருகின்ற அன்னை அதோ, பிரார்த்தன் செய்கிரு.ர்கள் :
"புனிதம் நிரம்பிய கடவுட் தந்தையே!... விரிந்து உலகிலே பரந்து கிடக்கின்ற ஏழை எளியவர்களிலே, எத்தனை எத்தனையோ பேர் பசியாலும் பட்டினி யாலும் அவதிப்பட்டு, வாழ முயன்று, கடைசியிலே, வாழ்க்கையோடு போராட முடியாமல், வாழ்வின் கடைசி அடைக்கலமாகச் சாவின் சந்நிதியைத் தஞ்ச மடையவும் செய்கிருர்கள்!- மனித குலத்தின் மக்களாகிய எங்களது சோதரர்களுக்கெல்லா அவர் கட்குரிய அன்ருடப் படியை எங்கள் வா. லாகவே அளந்திட அருள் புரிவீர் ஆகுக!
அன்பிற்கு இனிமையான தந்தை ஏசுவே!... பரிசுத்த மான எங்களது நேசிப்பின் மூலம், அவர்களுக்கெல்லாம் அமைதியையும் ஆனந்தத்தையும் வழங்கிடவும், கருணை செய்வீராக, கர்த்தர் பிரானே!"
அறநெறி சார்ந்த அன்ன தெரேசாவின் அன்புப் பணி இயக்கத்தின் அன்ருடப் பிரார்த்தனைக்காக அன்புத் தாய், உருவாக்கிய மேற்கண்ட பிரார்த்தனைப் பாடலில், பேரன் பிற்கும் பெருமதிப்பிற்கும் உகந்த அன்னேயின் மனித பண்பு பளிச்சிடுகிறது; மனிதாபிமானம் ஒலிகட்டுகிறது: மனிதநேயம் ஒளிகாட்டுகிறது! - . . . ... . .
கன்னித் துறவியாகவும் கன்னித் தாயாகவும் வாழ் கின்ற-வாழ்ந்து காட்டுகின்ற புனித தெரேசா பாரதத் தாய் மண்ணிலே, கல்கத்தா பெருநகரின் மோதிஜில்" சேரிப் பகுதியில் அன்று 1948-ம் ஆண்டு டிசம்பர் 21-ம்: நாளன்று, தம்மை ஓர் இந்தியக் குடிமகளாகப் பிரகடனப் படுத்திக் கொண்டு, பெருமையும் பெருமிதமும் கொண்ட நிலையில், தொடங்கிய அன்புப் பணி, இன்று உலகெங்கும் ஆல்போல் தழைத்து, சாதி சமயம். கடந்த உயர்வு மிக்கதோர் அன்புப் பணி இயக்கமாகவே விளங்கிவருகிறது: