90 சிந்தனையாளர் பிளேக் தெரியப்படுத்தின. இக்கருத்தில் வாழ்க்கைத் தவத்தில் விளைந்த வாழ்க்கையின் தத்துவம் பிரதிபலிக்கும்; பிரதிபலிக்கும் வாழ்க்கைத் தத்துவத்தில் பிரதிபலிக்கின்ற அன்பின் நியதியிலும் அன்பின் விதியிலும் சிருஷ்டியின் சூத்திரம் சூத்திரக்கயிருக நிழலாடும்! நிழல் ஆன நிஜம் என்னும் இந்த வாழ்க்கையின் உண்மை நிலைக்குப் பிரத்தியட்சமானதும் யதார்த்த மானதுமான ஓர் உண்மையெனவே அன்னை தெரேசாவின் அறநெறி தழுவிய அன்புப் பணி இயக்கம் இருட்டில் ஓர் ஒளியாக விளங்கத் தொடங்கியிருந்தது! கல்கத்தாவில் பரபரப்பு மிக்கதாகத் திகழ்ந்த கீழ் விளைவுச் சாலையிலே அமைதி காத்த அந்தப் பெருமனையில், 1950-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதியன்று அன்பின் அடிப்படையோடும் சட்டத்தின் ஆதாரத்தோடும் ஆரம்பிக்கப்பட்ட அன்னை தெரேசாவின் அன்பின் துரது வர்கள்' என்னும் அறப்பணி இயக்கம் இப்போது, தழைத்தும் செழித்தும் வளர்ச்சியடையத் தொடங்கி யிருந்தது. உலகளாவிய சான்ருண்மைக்கு உகந்த பேராளராகத் திகழ்ந்த இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் உபாசனைக்கு உகந்ததென விளங்கி வந்த அந்தக் காளிதேவியைத் தொழுதபின்னர், சற்றே ஒய்வு கொள்ள உதவும் இடமாகவே விளங்கி வந்த இடம், தர்மசாலை. - அன்னை காளிமாதேவியின் கருணைச் சூழலில் அமைந் திருந்த அந்த இடம், இப்பொழுது அன்ன தெரேசாவின் தொண்டு மனத்துக்குப் பிடித்து விட்டது!-மாநகராட்சி யின் சுகாதார அதிகாரி அந்தக் கட்டடம் பிடித்திருக் கிறதாவென்று கேட்டதற்குச் சம்மதம் சொன்னர் காலி இடமான இது எனக்கு மனநிறைவைத் தத்ததற்குக் காரணங்கள் பல இருந்தன், குறிப்பாக, இந்துக்களின் அன்ருடத் தொழுகைக்குரிய காளி,
பக்கம்:அன்னை தெரேசா.pdf/90
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை