பக்கம்:அன்பழைப்பு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பழைப்பு

31


நமது நாட்டு விவசாயிகளுக்கும் மேல்நாடுகளிலே உள்ள விவசாயிகளுக்கும் உடையிலே. உருவத்திலே மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம்.

அஞ்சி அஞ்சிச் சாவார் அவர் அஞ்சாத பொருளில்லை - என்று கூறும் அளவில்தனே நமது விவசாய மக்கள் இருக்கின்றாா்கள். அவா்கள் வாழ்க்கை உயர்வது எப்போது! போதிய உணவு இல்லை. வசதியில்லை. வாழ்க்கையே அவா்களுக்காோ் பெருந்தொல்லை. எனினும் மேல் நாட்டு விவசாயிகளைவிட நமது மக்கள், சிறந்த உழைப்பாளிகளாத்தானே இருக்கிறார்கள். இருந்தும், அவர்கள் வாழ்வு, ஏன் இப்படிக் கிடக்கிவேண்டும்? ஆகவே. அவர்களின் வரண்ட தலைக்குக் கொஞ்சம் எண்ணெய்! பஞ்சடைந்த அவர்கள் கண்களுக்கு ஒளி! மனைவி மானமுடன் கட்டிக்காெள்ளத் துணி! அவனுக்கு நாகரீகமான ஆடை! நாலு எழுத்தைக் கற்றுக் காெள்ளக் கூடிய வசதி அவன் குழந்தைகளுக்கு! இதையாவது ஏன், நாம் அவனுக்கு கிடைக்கும்படி பாடுபடக் கூடாது. அவனிடமிருந்து நாம் பெறும் லாபத்திலே ஏதாவது சிறிது, காெஞ்ச நஞ்சமாவது, அவன் வாழ்க்கைக்காகச் செலவிட்டால் என்ன?

இதையெல்லாம் அவா்களுக்கு நாம் செய்து தர வேண்டாமா? சமுதாயமும், கிராமவாசிகளுக்கு துரோகம் செய்தால், அவன் வாழ்வை நிமிா்ப்பதுதான் யாா்? இதை நாங்களே செய்வோம் - என்று கூறவில்லை. நான் யார் செய்தாலும், இவைகளைப் போக்க வேண்டும், என்று எண்ணாமலிருக்க முடியுமா அப்படி எண்ணி முன் வருவதுதான் யார்?

ஆகவேதான் நாட்டை ஆண்ட நண்பர் ஓமந்தூரார் அவர்களை இந்த வாழ்விழந்த வாயில்லா பூச்சிகளின் சார்பில், போராடப் புறப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர், முதலமைச்சராக இருந்தபோது, கருத்து வேற்றுமை காரணமாக, நாங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/32&oldid=1502210" இலிருந்து மீள்விக்கப்பட்டது