பக்கம்:அன்பின் உருவம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு வழிகள் 27.

தான் ஆம் ஆறு. முன்னலே உள்ள வரையறையின்படி, அநுபவிக்கவேண்டிய துன்பங்களே இப்பொழுது நுகர்ந்து கொண்டிருக்கிருேம் . 'மறுபடியும் அடுத்த பிறவி எடுத்து இதைப் போன்ற துன்பத்தையே அநுபவிப்போம். அதற்கு ஏற்ற வகையில் நாம் வாழ்கிருேம் என்ருல், அது ஆம் ஆறு ஆகாது. உலகில் நாம் வரும்பொழுது பிராரப்தம் என்ற வினே மூட்டையைக் கட்டிக்கொண்டு வருகிருேம். நம்முடைய கணக்கில் பெரிய வினைக் குவியல் ஒன்று இருக்கிறது. அதற்குச் சஞ்சிதம் என்று பெயர். அதி லிருந்து ஒரு பகுதியை இந்த வாழ்க்கையில் கரைத்து விடு வதற்காகக் கொண்டு வருகிருேம். அதற்குத்தான் பிராரப்தம் என்று பெயர். ஆனல் நாம் கையிலே கொண்டு வந்ததைக் கரைத்துவிடுவதோடு கின்றுவிடுவதில்லை. புதிய மூட்டையையும் சேர்த்துக்கொண்டு போகின்ருேம். இந்தப் பிறவியிலே நாமாகச் சேர்த்துக்கொள்ளுகிற வினே மூட்டை அது; அதற்கு ஆகாமியம் என்று பெயர். இப்படி வினைகள் மூன்று விதம்: நம்முடைய கணக்கிலே பல காலமாகச் சேர்ந்து வருகின்ற மூட்டையாகிய சஞ்சிதம் ஒன்று; இந்தப் பிறவியிலே அநுபவிப்பதற்காக வரையறை செய்யப் பெற்ற பிராரப்தம் ஒன்று; இந்தப் பிறவியிலே புதிதாக ஏற்றுக்கொள்கிற வினையாகிய ஆகாமியம் ஒன்று; ஆக மூன்று. இந்த மூன்றில் பிரர்ாப்தத்தைக் கரைத்துவிட்டு இறைவனுடைய திருவடியாகிய லட்சியத்தை கினேந்து வாழ்கிற வாழ்வுதான் ஆக்க வாழ்வு. எது நிரதிசய ஆனக் தத்துக்கு அழைத்துச் செல்லுமோ, எந்த நெறியில் சென்ருல் துன்பங்களுக்கு அப்பால் உள்ள ஆனந்த கிலேயை அடையலாமோ, அந்த நெறிதான் ஆக்க நெறி.

அந்த நெறி இன்னதென்று பெரியோர்களெல்லாம் சாத்திரங்களிலும் தேர்த்திரங்களிலும் காட்டியிருக்கி ருர்கள். சாத்திரங்களில் காட்டியவையெல்லாம் சட்டத் தால் சொல்லப்பெறுபவை போன்றன. தோத்திரங்களாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/33&oldid=535455" இலிருந்து மீள்விக்கப்பட்டது