பக்கம்:அன்பின் உருவம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - அன்பின் உருவம்

கினைப்பார்கள். அதனுடைய அளவு தெளிவாகத் தெரி யாது. பக்கத்தில் பக்கத்தில் ஒப்பு கோக்கிப் பார்த்தால் தான் அந்தப் பெருமை கன்ருகத் தெரிகிறது. -

மாலமுதப் பெருங்கடல் தம்முடைய உள்ளத்திலே புகுந்தது என்று மணிவாசகர் பாடினர். செந்தாமரைக் காடு அனேய மேனித் தனிச் சுடர் என்று அதைச் சொன்னர். அதோடு கில்லாமல் தம்மையும் கினேத்துப் பார்க்கிருர், 'கான் இத்தனே கோடி கோடியாக வியா பாரத்தில் குவித்திருக்கிறேனே. நான் வைத்த முதல் என்ன? என்று ஒருவன் பார்ப்பது போல இருக்கிறது, அந்த கினேவு. ஒன்றும் இல்லாமல் ஏதோ பிச்சைக் காச வாங்கி ஒரு வியாபாரம் ஒருவன் செய்தான். கோடி கோடி யாகச் சம்பாதித்துவிட்டான். சம்பாதித்த பிறகு அவன் நினைத்துப் பார்க்கிருன். நான் என்ன வைத்திருந்தேன்? ஒரு வெள்ளிக் காசுகூட இல்லையே' என்று கினேந்து பெரு மிதம் அடை கிருன் மாணிக்கவாசகர் அத்தகைய கிலேயில் கின்று பேசுகிரு.ர்.

'கான் இம்மைக்கு வேண்டியதையும் செய்யவில்லை; மறுமைக்கு வேண்டியதையும் செய்யவில்லை. ஒன்று இங்கா வது சுகமாக வாழவேண்டும்; அல்லது இங்கே உடம்பை வருத்தி விரதமிருந்து தவம் புரிந்து மறுமையிலாவது நன்கு வாழ வேண்டும். இரண்டு வகையான முயற்சியும் என்னிடம் இல்லை. கான் இரண்டும் இல்லாதவன்; இரண் டும் கெட்டான், எனக்குத் துணையும் இல்லை. என்னுடைய கரசரணுதி அவயவங்களும் மனமும் நான் மேலும் துன்பப்பிறவியை அடைவதற்குரிய செயல்களையே செய் தன. சின் அருளானந்தத்தைப் பெறுவதற்கு அவை துணை யாக நிற்கவில்லை. நான் துணையின்றித் தனியே கின்றேன். நற்செயலுமின்றித் துணையும் இன்றி இரண்டும் கெட்டா கைத் தனியாக வாழும் எனக்கு நீ உன்னத் தந்தாயே! என்று அவர் மனமுருகிப் பாடுகிருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/54&oldid=535476" இலிருந்து மீள்விக்கப்பட்டது