பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98



“ஏன் நான் தேடி வந்தி செல்வப் பசுங்கிளி மாடியில் தான் இருக்கிறதா ?”


‘அண்ணாவோடு போங்க, அத்தான் !’, என்று கூறினாள் சிந்தாமணி.


குலோத்துங்கன் அவளை நிமிர்ந்து பார்க்கவில்ை ஆனால் அவளது; காதுகளில் அவன் சிரிப்பைக் கொட்டினான் !


தன்னை ஈன்றவளும் தன் உயிரின் மறு பாதியைப் பெற்றவளும் சமையல் அறைக்கதவு வழியே கண் பதித்துக் கொண்டிருப்பதை மாமல்லன் கண்டு கொண்டான்.


வினாடிப் பொழுதிற்கு முன் இருந்த தெளிவு இப் பொழுது குலோத்துங்கனிடமிருந்து விடை பெற்றிருந்தது.


துன்பம், புயல், குழப்பம் இவையெல்லாம் சொல்லிக் கொண்டு வருவது கிடையாது. அம்மாதிரியேதான் போகும் போதும் பயணம் சொல்லிப் பிரிவதில்லை.


மேகலைப் பெண்ணின் தளிர்க்கரம் பிடித்துத்தன் கையால் வாசமுள்ள பூச்சூட்டுவதற்குள் பட்ட பாட்டை எண்ணினான் மாமல்லன், “காதல், கனவு, வாழ்க்கை இந்த மூன்றும் விசித்திரமாகத்தான் அமைந்து விடுகின்றன. எனக்குரிய முறைமைப் பெண்ன்ை எனக்குரிவளாக ஆக்கிக் கொள்வதற்குள் நான் எத்தனை போராட்டங்களைச் சமாளித்தேன்.? #శ్రీ! போலத்தான் இப்போது குலோத்துங்கனின் நிலையும் அமைந்திருக்கிறதோ ? ஆம், அவ்வாறுதான் இருக்கும்!’ என்ற சிந்தனையும் ஏற்பட்டது,


மேகலை காத்துத் தவம் கிடந்தாள். மாமல்லனுக் காகவே இதோ, இந்தக் குலோத்துங்கனுக்காகவே சிந்தாமணி காத்து தவம் செய்கின்றாள் !