பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘பீடத்திலேறிக் கொண்டாள் - மனப் பீடத்திலேறிக் கொண்டாள் !’

மாமல்லனின், உயிர்ப்பில் சலனம் ஏற்பட்டு அன்றோடு நாட்கள் நான்கு கழிந்து விட்டன. அத்தனை நாட்களின் இரவுப் பொழுதுகளிலும் அவனுடைய தனிமையில் இனிமை காட்டிய புண்ணியம் மேகலைக்கே உரியது.

இரண்டாம் இரவிலே மேகலை பயத்த சுபாவத்துடன் பதியை நிமிர்ந்து பார்த்து, அத்தான், நீங்க மட்டும் எனக்குக் கிடைக்காதிருந்தா, நான் எப்பவோ செத்துச் சுண்ணாம்பாகியிருப்பேன், ! என்று வேளியிட்டாள். முந்திய நாளில் துணைவியின் உள்ளத்தைச் சோதனை செய்ய முனைந்தானே ?- இந்த ஒரு பதில் அவனுக்கு நிறைவு தராதோ ?

பதறாமல் இருந்து காரியத்தைச் சிதறடிக்காமல் நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தான் அவன். இதுவரை எதுவுமே நடக்காதது போலத்தான் அவன் நடத்தை காணப்பட்டது. பழைய மாமல்லனின் உடலில் புதிய மாமல்லனின் உள்ளம் புனைந்துதான் அவன் நடந்து கொண்டான், பேசினான், பழகினான், அந்தப் புகைப் படத்தைப் பற்றி மேகலை பேச்செடுத்தபோதுகூட, அது ஒண்ணும் உனக்குச் சம்பந்தமில்லை!” என்று தீர்மான யாகப் பதில் அளித்து விட்டான் அவன் !