பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115



சொன்னதச் சொல்லும் இனிப்பிள்ளையானாள் குடும்பத் தலைவி.


“எப்போதோ நடந்தது இது. எனக்கு நினைப்பே இல்லை. ஆமாம், மாதவி வேறு ஏதாவது சொன்னதா?”


‘அது, எதுவும் சொல்லலை, ஏன் அவளை இங்கே வரச் சொல்லட்டுமா, அத்தான் ?”


ஏன் ?”


  • சும்மாத்தான் !’


வேண்டாம், வேண்டாம் !’


அவன் அவளை நிமிர்ந்து பார்க்கத் துணிவு பெற்றான். அவளது விழி விரிப்பில்தான் எவ்வளவு நம்பிக்கை ? அவன் மட்டும் அவளை தம்ப மறுத்தானே ?


விசித்திரமான யுக்தியொன்று அவனது மனத்தைப் புழுவாகக் குடைந்து வந்தது. அந்தப் படத்தைப் பற்றி குலோத்துங்கனிடமிருந்து இப்போது கேட்டால், அவன் சரிவரச் சோல்லான், அவனை மதராசுக்கு அழைத்துப் போனதும் அவனுடைய புத்தியைத் தெளிய வைத்து புகைப்பட சம்பவத்தைத் துருவி ஆராய வேண்டும் ! என்பதுவே முன்பு சொல்லப்பட்ட யுக்தி. ஆனால் அதே பொழுதில், அவனுக்கு வேறொரு புதிய அச்சம் தலை காட்டியது. ‘குலோத்துங்கன் பழையபடி சுயநிலை அடைந்து தேறிவிட்டால், சிந்தாமணிக்காகப் போட்டியிட மாட்டானா ? ஆமாம், இன்னும் கொஞ்ச தினங்களுக்கு அவனை இந்த ஸ்திதியிலேயேதான் நடமாடச் செய்ய வேண்டும் !” என்பது அவன் இறுதியாகச் செய்த முடிவு,


மனிதனை வேவு பார்க்கும் சிவப்புத் தலைகள் மூன்று காமம், வெகுளி, மயக்கம், அசத்தால் மனிதனை அவை