பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i27


‘மேகலை இப்பொழுதுதான் எனக்கு நிறைவு உண்டா னது அறியாத தமிழ்க் கலைக்கு நீயும் உன் பங்குக்கு நன்றி செலுத்தி விட்டாய், ரொம்பவும் சந்தோஷம், சரிவா, புறப்படுவோம்” என்று சொல்லி அவளுடைய தோளைப் பற்றிய வண்ணம், பாறையிலிருந்து எழுந்தான் அவன். அவளைப் பின்பற்றினான். அலைகடலில் அலைந்து வந்த காற்று வெறி பிடித்து வீசியது. oபான் பட்டுடை’ பறக்க முயற்சி செய்தது. அதை எடுத்துப் போட்டுக் கொண்டு நடந்தாள். மனையாட்டி பதித்துச் சென்ற தடத்திலேயே தன் சுவடுகளையும் முத்திரை வைத்த வண்ணம் நடந்தான் அவன். மேகலையை ரசித்தான். இருவர் எதிர்ப்பட்டனர். தம்பதி போலும் திருக்கழுக் குன்றத்தில் கழுகு உணவு கொள்ளும் காட்சியை அனுபவித்த போது, அவர்களைச் சந்தித்தார்கள். சிரித் தாள் மேகலை. ஏனென்றால் வந்த இணையின் அன்னப் பேடை புன்னகை இழையை வீசிச் சென்றது.


அணி பெற்ற அந்த மாலைக் கன்னி நீராழியில் முகம் பார்க்க நினைத்து விண் துறந்து மண் நாடி வரலா னாள்.


சமாதி நிறையில் அமைத்தான் மாமல்லன். அரைக் கணப் பொழுது கனவைக் கலைத்தாள் கனவுப் பதுமை. சதங்கைகள் குலுங்கின, நடைவண்டியை பையப் பையத் தள்ளப் பழகும் நேரத்தில் அந்தப் பாப்பாவின் கணுக் கால்களை அலங்கரிக்கும் வெள்ளிச் சலங்கைகள் சிரிக்கு மல்லவா, அந்த இன்பப் பண்ணை நினைத்துக் கொண் டான் அவன். கொஞ்சிய சலங்கைகளுக்குப் பின்னணிக் குரல் தந்தது சிற்றுளியின் நாதம். கலையையே உயிர்ப் பாகக் கொண்டு வாழ்ந்த ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமியின் நினைவை யார் தாம் மறப்பார்கள் தமிழ்ச் சரித்திரப் பேராசிரியர் அமரர் கல்கி அவர்களுக்கு மான இகமாக மரியாதை செலுத்தப்பட்டது.