பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#29


காலுக்கு வினையாய் போச்சு- அப்படின்னு ஒரு பழமொழி உண்டு. அது கணக்கிலே தான் இந்த நட்பும் இருக்குது ‘ என்று அங்கலாய்த்தவன், சிதைந்த கோயிலின் நப்பாசை யும் நிறைவேற்றினான் வெளிப்பக்கச் சுவரில் ஏதேதோ வாசகங்கள் கிறுக்கப்பட்டிருந்தன. அனார்க்கலியின் பாட்டு கரித்துண்டினால் எழுதப்பட்டிருந்தது காதலினால் மனிதர் களுக்குக் கவிதை உண்டாம், கானம் கிட்டுமாம். அவன் பார்வை கீழிறங்கியதும் அவன் நிலை கலங்கிப் போனான். காரணம் : சுவரில் வரையப்பட்டிருந்த பெண் சித்திரத்திற்கு அடியில் மேகலை’ என்றும், அதற்குப் பக்கத்தில் “குலோத்துங்கள் என்றும் பெயர்கள் பளிச்சிட்டன. சற்று முன் தோன்றிய பழமொழி அவன் நெஞ்சுக்குள் தீ மூட்டி யது. வேலிக்கு முள் போடப் போக, அது காலையே குத்தப் பார்க்குதா? -- பார்க்கிறேன்!"- பற்களைக் கடித்தான். மேகலைக்கு அதைக் காண்பிக்க வேண்டும் போலத் தோன்றியது கை தட்டி, பெயரிட்டு அழைத்தான் ஒட்டியிருந்த மனலைத் தட்டி எறிந்த பின் சிட்டெனப் பறந்து வந்தாள். பட்டுக் கன்னங்கள் அத்தான்’ என்று விளித்தன மாம்பழக் கதுப்புக்களின் தேனூறும் ருசி அவனுடைய இதழ்களில் நீரைவரவழைத்தது. போதை மண்டைக்கு ஏறியது கிரக்கம் !


“என்ன, அத்தான் . புறப்படலாமா ?”


·登


‘ஒ...! மாமல்லனின் உடம்பில் பெருகிய வியர்வையைத் துடைக்கும் பொறுப்பு மேகலையை அண்டியது.


ஒழுக்கெண்ணேசுவரர் ஆலயத்தைத் தரிசித்து விட்டு, பிரயாண விடுதிக்கு மாமல்லனும் மேகலையும் வந்து சேர்ந்தார்கள். கார் அவர்களை எதிர்பார்த்திருந்தது.


அ-9