பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$36


கடந்தது. உடம்பில் கதகதப்பு மிஞ்சியது, எழுந்தான், சோம்பல் முறித்தான், முகத்தைக் கழுவித் துடைத்தான், முகத்திற்குப் பூசப்படும் வாசனைப் பொடி கொஞ்சம் செலவானது, நடந்தான். நிலைப்படிக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்தது மேஜை, அதன் மீதிருந்த வெள்ளைக் காகிதமும் கறுப்புப் பேனாவும் அவன் கருத்தைக் கவர முயன்று தோல்வியைப் பரிசாகப் பெற்றன. நடையைத் தொடர்ந்தான். பூலோக சொர்க்கத்தின் நுழை வாயிலில் அடியெடுத்து வைத்தான், உதடுகள் சிரிப்பைக் காட்டின. உள்ளம் புதிய துடிப்பை எடுத்துரைத்தது. குனிந்தாள். மேகலை !’ என்று சன்னமான தொனியில் விளித்தான், மாமல்லன்,


புரண்டு படுத்த அவள் மருண்டு விழித்தாள். கொண்டவனைக் கண்டதும் மேலாடையைச் சீர்படுத்திக் கொண்டு விசை சேர்த்து எழுந்து உட்கார்ந்தாள். பிறகு தான் கனவனின் கண்களைப் பார்த்தாள், புரிந்தது செய்தி. வலது கையை “ஊஹூம்’ இன்று வேண்டாம்!’ என்ற பாவனையில் அசைத்தாள். கொட்டாவி பிரித்தவள் கண்களை விழித்துப் பார்த்தபோது அங்கே மாமல்லன் காணப்படவில்லை பெருமூச்சும் படுக்கையும் சதமென எண்ணினாள், அவள் .


அணை கடந்த துயரமெனும் வெள்ளம் விரக்தியின் கண் வழியாகச் சிந்தியுங்கூட, மனத்தின் சலனம் மாற வில்லை. நெஞ்சில் இறுத்திய வெறிப் பசி நினைவில் உறுத்திய வண்ணம் இருந்தது. மாமல்லன் திரும்பி வழி நெடுக நடத்தான். இரவு மங்கையின் காலங்கடந்த மெளன. சங்கீதம் அவனுள் எழுந்த தாபத்தை அணைக் காமல் அனைத்துக் கொண்டது. .