பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153



“அதை தயவு செஞ்சு இப்போது என்னிடம் கேட்காதீக்க, மேகலை...’


கள்ளமில்லா உள்ளம் கொண்ட மதலைச் செல்வம் அரும்புதிரச் சிரித்து, அச்சிரிப்பில் முத்துதிர்ந்து ஒலிப்பதை யொத்த பாணியில் மேகலை சிரித்தாள். ஆனால் அவள் குழந்தை அல்ல.


“சிந்தாமணி, உங்க அத்தான் எவ்வளவு வருஷமாக இப்படியே இருக்கிறாங்க ??


“எனக்கு விவரம் புரிஞ்ச காலந்தொட்டு ...”


‘தஞ்சாவூரிலே யாரோ டாக்டர் கிட்டே காட்டின தாகவும், குணம் ஏற்பட்டதாயும் எழுதினங்களாமே ?...’


éâ°


  • என்ன வியாதியாம் ?”


‘எல்லாம் மூளை சம்பந்தப்பட்டது. மூளையை அதிர்ச்சி ஏதோ ஒன்று அவர் மனசையும் தாக்கியிருக்க வேணுமாம்’


  • அந்த அதிர்ச்சி என்னவாம் ??


“அது அத்தானுக்குத் தானே தெரியும் ?”


“ஆமாம். அவங்க சொல்லலையா ?”


“ஊஹஅம், நான் கேட்கலே’


“சரி, நான் கேட்கட்டுமா r”


“ஐயையோ, வேண்டாம், நீங்க கேட்க வேண்டாம், மேகலை !’ نة همد