பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168



அவளை கண்டதும் நினைவொன்று கிளர்ந் தெழுந்தது. குலோத்துங்கனின் சித்த பேதத்திற்கு மாற்று மருந்தை உபதேசித்த உளநூல் வல்லுனரொருவர் தெரியப் படுத்தின வார்த்தைகள் முண்டி எழும்பின குலோத்துங்க னுக்குத் திருமணம் ஒன்றுதான் உடனடியான விடிவைக் காட்ட இயலும், இல்லையெனில் அவனது பருவத்து உணர்ச்சிகளே அவன் உயிரைக் குடித்து விடும்!”


மாயலோகத்துக்குரிய நிதி மிகுந்த-நீதி நிறைந்த திருமாறனின் ஞாபகம் சொடுக்கி நின்றது. சிந்தாமணியை அவன் வசம் ஒப்படைப்பதாகச் சொன்ன உறுதி சிலிர்த்தது. ஒரு வினாடி கடந்ததும், மாமல்லனின் முன் சிந்தாமணி வைத்த கடிதம் இது : .”


‘குலோத்துங்கன்”


என்னிடம் சிந்தாமசிையை ஒப்படையுங்கள் அவள்


வாழ்வு தான் உங்கள் இன்பம் என்கிறீர்களே ஆகையால் நீங்கள் எங்கட்கிடையிலே நந்தியாக மாறக்கூடாதல்லவா ? இன்னமும் பணம் கொடுக்கிறேன். ஒடி வாருங்கள், உங்களை உயிருள்ள வரை மறவேன். என்னுடைய கனவுக் கிளியின் இன்ப நிழவிலே நான் அமர்ந்தால்தான் நான் உயிருடன் உலவ முடியும் !


இப்படிக்கு


திருமாறன்’’.