பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


“பண்ணிய பாவமெல்லாம் பரிதிமுன் பணியேபோல நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய் ‘


சிந்தாமணி முன் வைத்த கடிதத்தைப் பார்த்த மாமல்லன் மனச்சாட்சியின் சந்நிதியில் கைகட்டி வாய் புதைத்து நின்றான். கண்களுக்குக் கட்டுப்பாடு விதிக்க அவன் பார் ?


‘அண்ணா!’


உச்சி முதல் உள்ளங்கால் முடிய நடுக்கம் ஏற்பட்டது, அண்ணா என்னும் பாசக்குரலை அனுப்பிய தங்கைக்குப் பதில் அனுப்ப என்ன சொல்வதென்று சிந்திக்க அவனுக்கு உள்ளம் ஏது உருவந்தான் ஏது ? மனச்சான்றின் காலடி யில் தவம் கிடந்தான்.


மாமல்லனின் விழிகள் இரண்டிலுமிருந்து ஆவி பறந்தது. அவனுடைய ஆவி பிரிந்து விட்டால் கூட தேவலாம் போலத் தோன்றியது. திருமாறன் தனக்குப் போட்டியாக ஒரு காலத்தில் அமைந்த நிகழ்ச்சியைப் பெரிதாக்கி மனத்தில் தேக்கிக் குழப்பிக் கொள்ளும் அளவுக்கு சின்ன புத்தியை வளர்த்துவிட விரும்பாத அவன் அதே திருமாறன் சார்பில் தன்னை உடந்தைப்படுத்தி குலோத்துங்கனிடமிருந்து சிந்தாமணியைப் பிரித்து, நீதியைத்துண்டித்து, நிதியிடம் அவளை அண்டச் செய்யத் திட்டம் புனைந்தவன் இதே மாமல்லன் தானே?...கைக்குக்


அ-12