பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170



கிடைத்த நிழற்பட மொன்றிலே சின்ன வயசில் தன் மேகலையும் தனக்கு முன் பின் அறிமுகமில்லாத குலோத்துங் கனும் இருக்கக் கண்டு, அதன் விளைவாக, ஒரு நாள் இரவு மேகலையும் குலோத்துங்கனும் ஒரே படுக்கையில் இருந்த தாகக் கனவு கண்டு, உதிரம் கொதித்து வந்தவனும் இந்த மாமல்லனேயல்லவா ? மனம் சலனமுற்றால் மனத்தின் பிரதிபலிப்பான கனவுகளும் பிழைபடத் தோன்றுவது இயல்புதானே ?


உடன் பிறவாப் பாசம் அவனைச் சுண்டியிழுத்தது.


“சிந்தாமணி, கண் கலங்காதே, அம்மா, உன் அத்தான் குலோத்துங்கன் உன்னுடையவர். அவரை எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து உ ன் னி ட ம் ஒப்படைக்கிறேன், திருமாறன் நல்லவர், ஆனாலும் சபலஉள்ளம் கொண்டவர் என்ன செய்வது ? மனிதர்களுள் அவரும் ஒருவர். ஆகவே குறைகள் இருப்பது இ ய ற் ைக, திருமாறன் என் சொல்லுக்குக் கட்டுப்படுவார் நீ அஞ்சாதே, என்னுள் நீ தோன்றி விளையாடாத பொழுது கொஞ்சம் கூடப் பிறந்த தங்கையெனவே உன்னை நான் மதிக்கிறேன். பண்மும் பண்பும் நிறைந்த திருமாறனின் கைகளில் உன் எழிலைப் பாதுகாப்புப் பொருள விக்க நானே பலமுறை எண்ணியது உண்மை. அது தவறு என்பதை இப்பொழுது உணர்கிறேன். என்னைப் பொருத்தருள் சகோதரி, முன்னொரு நாள் உன் புகைப்படம் என் புத்தகத்தில் இருக்கக் கண்டேன். அதை நேற்று மறுபடியும் பார்க்க நேர்ந்தது ? உன் உரு என் உள்ளத்தை மாற்றியது. கடந்த சில மாதங்களாக நான் மனிதத் தன்மையை இழந்து விட்டிருந்தேன், பித்தனானேன், பேயாக உரு மாறாது போயினும் உள்ளம் பிசாசாக உருவெடுத்தது, என் மேகலை வாயும் வாயிறுமாக இருக்கிறாள். அவள் புதுவாழ்வு பெற்றவுடன் அவளிடமும் மன்னிப்புக் கேட்கப் போகிறேன். அவ்ளிடமிருந்து எனக்கு மன்னிப்புக் கிடைத் தால்தான் நான் மனிதனாக உலவ முடியும் !'