பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 73


என்கிற வகைதான் விளங்கலை. குலோத்துங்கன் எங்கே போச்சோ, தெரியலே, சிந்தாமணி! நல்லவங்களை கடவுள் சோதிக்கிறதுதான் வளமை ஆனால் கடைசியிலே அவர், களுக்கு ந ல் ல வழி காட்டறதுதான் தெய்வத்தின், விளையாட்டு ரகசியமா இருந்திருக்குது. உன் அண்ணன் மாமல்லன் உன் பேரிலே உயிருக்குயிராய் இருக்கிறபோது நீ கலங்கவேண்டிய தேவை இல்லே, அம்மா !” என்றாள் கோசலை,


வார்த்தைகளுக்கு அமைதி காட்டும் தந்திரம் கை கொடுப்பதென்பது. மலையைக் கல்லி எலியைப்பிடிக்கும் கதைதான் வெந்த இரவுகளை விரல்விட்டுக் கழித்தாள் சிந்தாமணி, மேகலைக்கு புதிய ஆலோசனை தோன்றியது சித்தன் போக்கு சிவன் போக்கு என்றிருக்கும் குலோத்துங் கனை மணந்து இவள் என்ன இன்பம் காண்ப்போகிறாள் திருமாறனைக் கல்யாணம் செய்து கொண்டால்தான் என்ன ?’ என்று எண்ணமிட்டாள். சுற்றி வளைத்துப் பேச்சைத் தொடங்கி, நினைத்த கட்டத்திற்கு அவளைப் பரபரவென்று இழுத்து வந்து நிறுத்தினாள், ‘அண்ணி எனக்கு என் அத்தான்தான் உயிர், உலகம் எல்லாம் அவர் இல்லையானால், நான் இல்லை !’ என்று தீர்ப்பு கூறிவிட்டவளிடம், பேச என்னதான் காத்திருக்கப் போகிறது ?


மேகலை வெள்ளோட்டம் வி ட் ட மனோரதப் பிரயாணம் வேறு திக்கில் மடங்கியது. நிழற்படங்கள் அடக்கிவைத்திருந்த கூட்டை உதறினாள். முதன் முதலில் அவள் விரல்கள் பற்றியெடுத்த அந்தப் படத்தில் குலோத்துங்கனும் தானும் இருப்பதைக் கண்டாள். கட்டிய கணவனின் மேஜையடியிலிருந்து கண்டெடுத்த அதே படத்தின் வேறு பிரதி இது, பிஞ்சுப் பிராயத்தில் எடுக்கப் பட்டது. அவள் நினைவு கூட்டிப் பார்த்து, முடிவு கூட்டிச் சிந்தித்த பழைய விஷயம்,