பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177



மேகலை பிழைத்தாள். பிழைத்தது மறு பிழைப்பு. அவள் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தாள், கை விரல்கள் பத்திலும் நெருப்புக் கொப்பளங்கள், காற் பாதங்களின் முன் பகுதிகளில் ரத்தம் கன்றிய சிவப்பு. அவள் வாய் விட்டு விம்மிக் கொண்டிருந்தாள்.


கண்களில் அணை கடந்த வெள்ளமும் இதயத்தில் ஆறாத கண்ணிரும் சூழ அமர்ந்திருந்த மாமல்லன் அவளது நெற்றிப் பொட்டைத் தடவிக் கொடுத்த வண்ணம் இருந்தான்.


“மேகலை, ஏன் கண்ணே அப்படிச் செய்யத் துணிந் தாய் ?. என்னுடைய புத்தி கெட்ட செயலுக்கு நீ எனக்குப் பாடம் படித்துக் கொடுக்க எண்ணியா உன்னை யும் உன் செல்வத்தையும் நீ அழித்துக் கொள்ள பிரயத் தணப்பட்டாய் ... ஐயோ, இன்னும் ஒரு கணம் தாமதித்து நான் தீப்பிழம்பின் சுடரொளியைக் கண்டிருந்தால்கூட, உன்னை நான் உயிருடன் கண்டிருக்கமாட்டேன் ??


மேகலை, நான் தொடக்கத்திலேயே ஐயமென்னும் பிசாசை விரட்டி விட்டிருக்க வேண்டும். தவறிவிட்டேன். உன்னிடம் சந்தேகக் கணை விடுக்க எனக்குத் துணிவில்லை. உயிர்ச் சக்தி இற்ற உடம்புடன் என்னை நானே அழித்துக் கொண்டிருந்தபோதெல்லாம், உன் எழில் போதை என் கண்களைக் கட்டி, விதி கண்ணாமூச்சி விளையாடியது. கடைசியில், என்னை நீங்கள் நம்புகிறீர்களா, அத்தான் ? என்று கேட்ட அக்கணமே என்னுள் புதிய ஜீவன் பிறந்தது. உன்னை நம்பினேன். கையெடுத்துக் கும்பிடத்தக்க புண்ணியவதியான உன்னுடைய கற்பின் பொற்பினை. தவறு படக் கருதிய என்னை என் மனச்சாட்சி சித்திரவதைப் படுத்தியது. ஐயோ, இந்த குலோத்துங்கன் ஏன் அவனியில் அவதரித்தான் :