பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鲨“演象 悪 f務


‘குலோத்துங்கன் கிறுக்கின டைரியின் ஏடுகளை, அவன் எப்படி எப்படியோ தயாரித்த போட்டோக்களை வேறு யாராவது பார்த்திருந்தால், என்ன தீவினை விளையுமோ? . முதலில் இவற்றை தீயிட வேண்டும், அப்பால், குலோத்துங்கனை பழி வாங்கியே தீருவேன்.’


நாசித்துவாரங்கள் புடைத்தன. நெற்றி மேட்டில் தசைக் கோளங்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடின. மாமல்லன்தானா இவன் ?


மேகலை தன் உள்ளங்கைகளைப் பஞ்சுமெத்தையில் கவனமுடன் அழுத்தி எழுந்து, பிறகு இடுப்புப் பகுதியில் கைகளைக் கொடுத்து உடலை நகர்த்தி, தலையணைகளைப் பக்கவாட்டில் தள்ளிய வண்ணம் உட்கார்ந்தான். கீழ் மூச்சு வாங்கிற்று. ‘அத்தான், சற்றுமுன் சொன்ன இரண்டு காரியங்களை மட்டும் தயவு செய்து நீங்கள் செய்து விடாதீர்கள், அந்தப் படங்கள், டைரி எல்லா வற்றையும் நான்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். என் மானத்தை என் தூய்மையால்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். என்னை நானே பாதுகாத்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பு. குலோத்துங்கனைப் பழி வாங்கி விட்டால், அப்புறம் உங்கள் தங்கைக்கு நீங்கள் கொடுத்த வாக்கை எப்படி நிறைவேற்ற முடியும் ?... குலோத்துங்கனைப் பழிவாங்கும் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள், அத்தான்!...”*


வாய்ப் பேச்சு முடிந்தது. கண்களின் பேச்சு ஆரம்ப மானது


குலோத்துங்கனைப் பழிவாங்கப் போவதைக் கேட்ட மாமல்லன் பதறினான். தான் அந்தப் பொறுப்பை ஏற்க நினைக்கையில் ஏற்படாத பயம், தன் மனைவி பழி வாங்குவதாகக் கூறக் கேட்டதும் உண்டாயிற்று. அவளுடைய கண்ணிரின் வழியே இதயம் புகவும் துணி,