பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184



தடம் புரண்டு மருதையாற்றில் விழுந்து கொண்டிருக்கை பில், குலோத்துங்கன் சுழன்று விழுந்ததை எப்படியோ பார்த்து விட்டாள் அவள். குழந்தையைப் பெட்டியிலேயே வைத்துவிட்டு, அவனைக் காப்பாற்றும் நோக்கத்துடன் கீழே தாவினாளாம் மேகலை இச்சம்பவத்தை விதி: என்னும் பெயரால்தான் நான் விளிக்கவேண்டுமா ? அப்ப்டியானால் விதியின் பிழை என்றுதானே இம்முடிவைக் குறிப்பிடவேண்டும்.


இமை துணிகளைச் செம்மைப் படுத்திக் கொண்டு படைத்தவனை அழைத்தேன். வந்தான். ‘கண்காணும் தெய்வமே மேகலையையும் மாமல்லனையும் ஏன் பிரித் தாய்... என்று ஆத்திரம் அடைக்க வினவினான்.


மேகலையும் குலோத்துங்கனும் மறுபிறப்பு கொண்டு விட்டனர். முதற்பிறவியில், மேகலையை உளமார விரும் பினான் குலோத்துங்கன். ஆனால் கனவு ஈடேறவில்லை. அந்த விட்டகுறை தொட்ட குறையின் தீய விளைவாகத் தான் இப்பிறப்பில் மேகலையை மறக்கமாட்டாமல் குலோத்துங்கன் திண்டாடினான். அடுத்த பிறவியில் அவர் கள் இருவரும் உயிரும் உடலுமாவார்கள்i


மேகலை பெற்ற கண்ணம்மா இப்போது என் நிழலில் ஒதுங்கியிருக்கிறாள். ஆ டி வ ரு ம் தேனின் சுவையை ம நீதித் திளைக்க சுய நினைவு வரும்போதெல்லாம் வரு கிறார் மாமல்லன். சிந்தாமணி வந்து அதிக நாட்களாகி விட்டன அமிர்தம் விரைந்து வந்தாள், அத்தான், கண்னம்மாவின் அப்பா வந்து விட்டார்....!’


செல்வக் களஞ்சியத்துக்கு ஆயிரம் முத்தங்கள் ஈந்தார் மாமல்லன், கண்ணம்மா அழுதாள், என்னிடம் தாவினாள். ஏத்தினான் ! அமிர்தம் வா ங் கி க் கொண்டாள்.


‘..ம்.மா...’


மாமல்லனின் கண் ணிரைத் துடைத்தெடுக்கும் பேறு


பெற்றவள் - பொற்பு மிகுந்து வள் - அன்புத்தாய் மேகலை ஒருத்தியேயல்லவா ?


- முற்றும் -