பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


வரையிலே கொஞ்சம் போடுங்க .சாப்பிட்டுட்டு போறேன். ஒரு அவசரக் காரியம். அம்மா வருகிறதுக்குள்ளே நான் போனால்தான் நல்லது’ என்று பதிட்டத்துடன் கூறினான் 1. ரமல்லன் ,


சிந்தாமணி அவனை ஏற இறங்கப் பார்த்தாள். இதழ்க் கரையில் மென் சிரிப்பு மெல்ல ஒதுங்கியது.


“நீங்க அரியலூருக்குத் தானே போகப் போlங்க ?”


ஒரு கணம் அவன் அப்படியே அசத்து விட்டான். அவள் விடுத்த கேள்வி அவன் வாயைக் கட்டி விட்டதை அவன் அறியாமல் இல்லை.


‘என் கேள்வி சரிதானே ?” “எப்படித் தெரியும் உங்களுக்கு ‘ “உங்க முகம்தான் அந்த ரகசியத்தைச் சொல்லிச்சு!”


‘பெண்களின் மன ஆழத்தை ஆண்கள் கண்டறிய முடியாது என்பார்கள் ஆனால் ஆண்களின் மன ரகசியங் களையும் சேர்த்து அறிந்து கொள்ளும் சாகலம் இந்தப் பெண்களுக்குத் தலைகீழ்ப்பாடம் போலிருக்கிறது : என்று அவன் நினைத்தான்.


“சிந்தாமணி, உங்களிடம் நான் எதையும் மறைக்க முடியாது. என் கதையையும் என் மேகலையின் கதையை யும் நீங்கள் அறிவீர்களென்றே நம்புகிறேன். அம்மா சொல்லியிருப்பார்கள் ! நானும் மேகலையும் புருஷன் மனைவியாக ஆகப்போகிறோம் என்று நாங்கள் மட்டுமல்ல எங்கள் இருதரப்புப் பெற்றோர்களும் தீர்மானித்திருந்தார் கள். அன்று எழுதப்பட்ட எழுத்தை அழித்து எழுத ஆண்டவன் எப்படித் துணிவான் ? பார்க்கிறேன் ! எங்கள் காதலுக்கு உரைகல்லாக அமைய ஒரு குறுந் தொகை முன்வர வேண்டாம், ஒரு சிலப்பதிகாரங்கூட