பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43



£ irrørë Í?”


‘உங்க மாதிரி இப்படி அனுதாபப் பட்டுத் தேறுதல் சொல்றதுக்குக் கூட இந்தக் கலி காலத்திலே ஆள் பஞ்சம் வந்திட்டுதுங்க, ஐயா. உங்களைப் பார்த்ததும், என் அப்பா ஞாபகந்தான் எனக்கு வந்திச்சு”,


மேகலை தொடமுடியாத தொலைவி னின்றும் தொட முடியாத சிரிப்பிழைகளைப் பின்னிக் கொண்டிருப்பதை மாமல்லனின் உள் மனம் உணரத் தலைப்பட்டது.


‘தம்பி பேரு என்ன ?”


    • u r B ఫ్రుడు ఇడ !**


மடியில் வைத்திருந்த புத்தகத்தைக் கையில் எடுத்து அவனிடம் காட்டினார் பெரியவன், மாமல்லன் குறிப்பைப் புரிந்து கொண்டான். மாமல்லபுரத்துச் சிற்பங்களைக் காட்சிப் பொருளாக்கி விளம்பரம் செய்திருந்த அரசாங்கத் தாரின் ரெயில் கால அட்டவணைப் புத்தகம் அது. சரித்திரம் திரும்பியது. பல்லவ சாம்ராஜ்யத்தின் மறக்காத கதையும், மங்காத கலையும், மறையாத புகழும் திரும்பி சிவந்தன.


ரங்கரத்தினம் என்பது அப்பெரியவருக்கு இடப்பட்ட பெயர் எனவும், அவருடைய தலைச்சன் பிள்ளை தமிழகத் தின் தலை நகரில் அரசாங்க அலுவலகம் ஒன்றில் ஊதியம் பெறுவதாயும், மகனைப் பார்த்து விட்டுத்தான் அவர் திரும்புவதாகவும் குறிப்புகள் கிடைத்தன. அவருக்கும் சொந்த ஊர் அரியலூராம் !


காத்துத் தவம் கிடந்த சிறிய ரெயில் நிலையங்களை லட்சியம் செய்யாமல், தன் இலட்சியத்தில் கருத்துப்


பதித்தது ரெயில்.


தண்ணிர் பட்டுக் கலைந்த ஓவியம் மாதிரி காட்சி யளித்தது தண்மதி,