பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62



சிரித்தான் மாமல்லன். அவன் மட்டுமா சிரித்தான்? அல்ல. அவனுடைய கொண்ட காதல் சிரித்தது, கண்ட கனவு? சிரித்தது. உருவாக்கி வைத்திருந்த எதிர் காலம் சிரீத்தது.


அற்ப மனிதனுக்கு இவ்வளவு கம்பீரமாக-இத்துணை அழுத்தமாக-இத்தகைய கர்வத்துடன் சிரிக்கத் தெரியுமா ? சிரிக்க முடியுமா ? -


ஆம் !


‘மாமல்லன், உங்களை மறந்து ஏன் இப்படி கட கட வென்று சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள்?’


தொடுக்கப்பட்ட வினாக்குறி மாமல்லனது நெற்றித் தளத்தில் ஆச்சரியக் குறியாகத் தழும்பு பதித்தது. உதடுகள் கரை சேர்த்த சிரிப்பின் அமுதத் துளிகள் இன்னமும் இனித்துக் கொண்டிருந்தன. இரு கண்களும் சிந்தனை வசப்பட்டன.


ஏன் சிரித்தான் ? என்ன சிந்தித்தான் மனிதன் சிரிக்க யத்தனம் செய்கிறானென்றால், ஆண்டவன் அழத் தொடங்கி விடுவானென்ற சிருஷ்டி ரகசியம் அவனுக்கு மட்டும் பட்டு விட்டதோ ? . கன்னக் கதுப்புக்களிலே மெல்லிய கறுமை வண்ணம் பூசியது. ஏன் இந்தக் கறுப்பு நிறம் ? மனிதனை அழவைத்து வேடிக்கை பார்த்துச் சிரிக்கும்வரை படைத்தவனுக்கு அமைதி பூக்க , என்ற நடப்பு உண்மையை அறிந்தவனா அவன்?


பரிதாபாம் மாமல்லன் !


‘மாமல்லன் .


“கூப்பிட்டீர்களா, சண்முகம் ?” **、 }