பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63



“சண்முகம், என்ன அப்படிச் சிரிக்கிறீர்கள் ?”


“நான் சிரிக்கிறேனா, மாமல்லன் ?”


‘பிறகு ?...’


‘நீங்கள் சிரிக்கிறீர்கள் ?”


‘ஒஹோ!... ஆமாம். உண்மைதான் ‘


“ம். நீங்கள் இப்பொழுது எங்கேயோ இருக்கிறீர்கள்!”


‘இல்லை, இல்லை. உங்கள் காப்பிக் கம்பெனியில் தானே இருக்கிறேன் ?”


fr


  • உங்கள் மனம்..! ‘அது எனக்குச் சொந்தமல்லவே, சண்முகம் !” “அப்படியா !”


“ஆம் !’


‘புரிகிறது !”


  • சந்தோஷம் ??


ஒருவர் சிரிப்புடன் இன்னொருவர் சிரிப்பு விளையாடியது. காப்பித் துரளின் இனிய நெடி இதமாக இருந்தது காப்பிக் கொட்டைகளை அரைத்துப் பொடி செய்து கொண்டிருந்த இயந்திரம் பணி முடிந்தது. ஒய்வெடுத்தது. இளங்காலைப் பொழுது அமைத்துத் தந்திருந்த அமைதியை மெல்ல மெல்லப் பறிக்கத் தொடங்கிற்று வெயிலின் சூடு.


சின்னப்பையன் சண்முகத்திடம் ஏதோ செய்தி சொன்னான். உடனே, அவர் மாமல்லனைக் காலைப் பலகாரத்துக்கு அழைத்தார். தன் தாய் தன் வரவுக்காகக்