பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66



சோமசுந்தரம் ஆடவில்லை, அசையவில்லை. உடன் பிறந்த தங்கையையே இமை வலிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு வினாடி வாய் திறக்காமல் இருந் தார். பிறகு கோசலை, நீ இப்படித் தப்புத் தவறுமாப் புரிஞ்சிக்கிட்டா, அதுக்கு நான் என்ன செய்யட்டும் ? என் பேச்சை நம்பு, தங்கச்சி, மேகலை-மாமல்லன் ரெண்டு பேருங்க ஜாதகத்தையும் பார்த்துச் சொன்ன ஜோஸ்யர் பிரபலமானவர். அவர் பேச்சை நம்பாமல் வேறே என்னாலே என்ன செய்யமுடியும் அவக்க அவங்க தலையெழுத்துப்படித் தானே லோகத்திலே எதுவும் நடக்கும் ? நாம் என்ன செய்ய முடியும் ? எல்லாம் தெய்வ சித்தம் கொள் வினை கொடுப்பினை இல்லேன்னா , அதுக்காக நம்ப ரத்த பாசம் கூடவா அத்துப் போகும் ? உன் வீட்டுக்காரருக்கு- என் மச்சினருக்கு நான் கையடிச்சுக் கொடுத்ததை என் ஆவி தீருற மட்டும் மறக்க மாட்டேன். என்னையே எதிர்க் கேள்வி கேட்டுப்பிடாதே. வச்ச முகூர்த்தத்தை நிறுத்தப் படாது. மாமல்லனுக்கு நானே இருந்து இந்த மாசத்துக் குள்ளேயே கல்யாணம் செஞ்சு வைக்கிறேன். நீ கவலைப் படாதே, தங்கச்சி. என் பொண்ணு ஜாதகமும் உன் மகன் ஜாதகமும் கனகச்சிதமாப் பொருந்தியிருக்கிறதாய்ப் பொய் பேசுவாங்க. அதையெல்லாம் காதிலே வாங்கிப் பிடாதே, கோசலை, நான் உன் அண்ணன் இல்லியா?... உன் கஷ்ட நஷ்டம் உன்னோடு கூடப் பிறந்த எனக்கும்


o


இருக்காதா ? என்னை நம்பு, தங்கச்சி !’ என்று திருவாய் மலர்ந்தார்.


தேன் சொட்ட உரைத்த தன் சகோதரியின் வாய் வார்த்தைகள் அவரது இதயத்திற்கு உரை கல்லாக அமைந்து விட்டதாக அவள் எண்ண மறுத்தாள். தேனடையில் வேப்பஞ் சாறு அப்பப்பட்டிருப்பதாகவே ஓர் உணர்ச்சி பரவியது. அந்தக் கசப்பு அடித் தொண்டை யிலிருந்து, இதயத்தின் அடி வரைக்கும் படர்ந்தது. வலுக்