பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4சமேதலை !’


“அத்தான், ஏன் இவ்வளவு தயங்குகிறீர்கள் ?”


‘ஒன்றுமில்லை, மேகலை,” ‘அகியலூர் உங்களுக்குப் பயங்காட்டுகிறதா ?” ‘இல்லை”


  • பிறகு ?...”


‘உன் அன்பு, மேகலை, அன்பு ‘


‘என்னுடைய அன்பு உங்களைப் பயமுறுத்துகிறதா


‘அல்ல, சிரிக்க வைக்கிறது, சிந்திக்க வைக்கிறது. கட்டுத்திட்டங்களைத் தகர்த்தெறிந்து, பணத்தின் பேரில் பாசம் கொண்ட பெற்றவர்களின் கண்ணிரைச் சட்டை செய்ய மல், குபேர புரி மாப்பிள்ளையையும் மதிக்காமல், உன்னுடைய ஏழை அத்தானுடன் வாழ்க்கை நடத்தத் துணிந்துவிட்ட உன் பெருந்தன்மை எனக்கு அளவில்லாத சந்தோஷத்தைத் தருகிறது அன்று எழுதிய எழுத்தை அழித்தெழுதக்கூட க ட வு ள் துணியவில்லையல்லவா ? ஆனதால், நீயும் நானும் முதலில் இங்கிருந்து சென்னைக்குப் புறப்படவேண்டும். ஏற்கனவே குறித்தெழுதப்பட்ட முகூர்த்த வேளையிலேயே நீயும் நானும் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். இதுதான் என்னுடைய முடிவு ஆகும் !”


“நான் சொல்லவேண்டுமென்று நினைத்திருந்ததை நீங்களே கூறிவிட்டீர்கள்?”


அப்படியா !”


“ஆமாம், அத்தான் !”